ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா

கடந்த 9 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் தோல்வியை சந்தித்தது இந்தியா.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 24, 2020, 03:36 PM IST
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா title=

புது டெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தனது முதல் தோல்வியை சந்தித்தது. வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான அணி நியூசிலாந்திடம் வீழ்ந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையிலான NZ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கடந்த 9 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தோல்வி இதுதான். இந்தியாவின் கடைசி டெஸ்ட் தோல்வி 2018 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் மைதானத்தில் இருந்தது. அதன் பின்னர், இந்திய அணி 8 போட்டிகளில் வென்றது மற்றும் 1 டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் 60 புள்ளிகளைப் பெற்று 120 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. இதனால் இலங்கை அணி 6 வது இடத்திற்கு சென்றது. 360 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒவ்வொரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று தலா 40 புள்ளிகளை இந்தியா வென்ற நிலையில், நியூசிலாந்து இந்த போட்டியில் வென்றதில் 60 புள்ளிகளை ஏன் பெற்றது? ஏனென்றால், ஐ.சி.சி விதிகளின்படி, ஒவ்வொரு டெஸ்ட் தொடரும் 120 புள்ளிகளைக் கொண்டுள்ளன. ஒரு தொடரில் எத்தனை போட்டிகள் என்ற அடிப்படையில் புள்ளிகள் அளிக்கப்படும்.

புள்ளிகள் விளக்கம் குறித்து அட்டவணை:
ஒவ்வொரு தொடரும் 120 புள்ளிகள் மதிப்புடையது. இந்த புள்ளிகள் ஒரு தொடரின் போட்டிகளின் எண்ணிக்கையில் விநியோகிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் ஒவ்வொரு டெஸ்டுக்கும் 60 புள்ளிகள் கிடைக்கும். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் 40 புள்ளிகள் கிடைக்கும். ஒருவேளை போட்டி "டை" ஆனால் கிடைக்கக்கூடிய புள்ளிகளில் 50% ஆக இருக்கும். அதே சமயம் ட்ராவில் முடிந்தால் 3:1 என்ற விகிதத்தில் புள்ளிகள் இருக்கும்.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் தொடரில் மூன்று போட்டிகள் இருந்ததால், ஒவ்வொரு போட்டிக்கும் தலா 40 புள்ளிகள் மதிப்பு இருந்தது. நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் மட்டும் என்பதால், ஒவ்வொரு போட்டிக்கும் 60 புள்ளிகள் மதிப்பு வழங்கப்படும்.

வரும் சனிக்கிழமை முதல் இரு அணிகளும் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் விளையாடப்படும்.

Trending News