இந்திய அணி டாஸ் வெற்றி
இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டிருந்தது. கடந்த 2 போட்டிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக விளையாடாமல் இருந்த சுப்மான் கில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
பிளேயிங் லெவனில் மாற்றம்
அதனால் கடந்த 2 போட்டிகளிலும் விளையாடிய இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். கேப்டன் ரோகித் சர்மா இது குறித்து நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அவர் பேசும்போது, சுப்மான் கில் முழு உடல் தகுதியை பெற்றுவிட்டதாகவும், 90 விழுக்காடு அவர் களமிறங்குவார் என தெரிவித்திருந்தார். அவர் கூறியதைப் போலவே உலக கோப்பையில் இந்திய அணிக்காக சுப்மான் கில் அறிமுகமானார்.
மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்த டாப் 10 இந்திய கிரிக்கெட் வீரர்கள்
அகமதாபாத் பிட்ச் எப்படி?
அகமதாபாத் மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற உலக கோப்பை முதல் போட்டியில் கூட இங்கிலாந்து அணி நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே வெற்றிகரமாக எட்டியது. இந்த மைதானம் சேஸிங்கிற்கு உகந்த மைதானம். ஏற்கனவே நடந்த பல போட்டிகளில் சேஸிங் செய்த அணியே அதிக வெற்றிகளை பெற்றுள்ளன. அதனால், இரு அணி கேப்டன்களும் டாஸ் வெற்றி பெற்றால் பந்துவீச்சையே தேர்வு செய்வதாக கூறினர். ஆனால் டாஸ் இந்திய அணிக்கு சாதமாக விழுந்தது.
இந்திய அணிக்கு சாதகம்
இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதல் இரு போட்டிகளிலும் சேஸிங்கிலேயே வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணியும் கடந்த போட்டியில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சேஸிங்கில் வென்றுள்ளது. இதனால் இரு அணிகளும் பேட்டிங்கிற்கு உகந்த இந்த மைதானத்தில் டாஸ் வெற்றி பெற்றால் பவுலிங் செய்யவே விரும்பினர். இதனடிப்படையிலேயே கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அகமதாபாத் பிட்சை பொறுத்தவரையில் இந்திய அணி இங்கு ஒருநாள் போட்டிகளில் நல்ல ரெக்கார்டை வைத்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் இந்திய அணி அதிக வெற்றிகளையே பெற்றிருக்கிறது.
பலத்த பாதுகாப்பு
மைதானத்தில் சுமார் 1.32 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7,000 குஜராத் போலீசாரும், 4,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க | Worldcup 2023: இன்னும் எத்தனை போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ