Worldcup 2023: இன்னும் எத்தனை போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும்?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும் என்பதை பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 12, 2023, 11:35 AM IST
  • சூடுபிடிக்கும் உலக கோப்பை போட்டிகள்
  • அரையிறுதிக்கு தகுதி பெற தேவையான வெற்றி
  • இந்திய அணி இன்னும் எத்தனை போட்டிகளில் ஜெயிக்கணும்?
Worldcup 2023: இன்னும் எத்தனை போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும்? title=

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற்றது. இதனையடுத்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, இப்போது உலக கோப்பை புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணிக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இருக்கிறது. இன்னும் இந்திய அணி 7 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். 

இரண்டு போட்டிகளிலும் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருப்பதால் இந்திய அணியின் நெட் ரன்ரேட்டும் சிறப்பாக இருக்கிறது. இது உலக கோப்பை இறுதிக் கட்டத்தில் வெற்றிகளில் சமநிலையில் இன்னும் சில அணிகள் இருந்தால், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்ல இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருக்கும். 

மேலும் படிக்க | Hardik Pandya Injury: ஹர்திக் பாண்டியாவுக்கும் காயம்..! சிக்கலில் இந்திய அணி

இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றிகள் தேவை?

இந்த உலக கோப்பை மிகவும் நீண்ட தொடராக நடைபெறுகிறது. ரவுண்ட் ராபின் முறையில் உலக கோப்பை நடைபெறுவதால் ஒவ்வொரு அணியும் உலக கோப்பையில் பங்கேற்றிருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதாவது, 10 அணிகளும் 9 போட்டிகளில் விளையாடும். ஒரு அணி 6 போட்டிகளுக்கும் மேல் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இங்கிலாந்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியும் இதேபோன்று ரவுண்ட் ராபின் முறையிலேயே நடைபெற்றது. 

இந்த உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து ஐந்து லீக் நிலை ஆட்டங்களில் வெற்றி பெற்று நான்காவது இடத்தை பிடித்திருந்தது. அதாவது 11 புள்ளிகளுடன் நாக் அவுட்டுக்கு தகுதி பெற்றது. இந்தியா 15 புள்ளிகளுடன் (7 வெற்றி) முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவும் முறையே ஏழு மற்றும் 6 வெற்றிகளுடன் தகுதி பெற்றன.

நியூசிலாந்து ஐந்து வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும், நிகர ரன் ரேட்டில் (NRR) அதே புள்ளிகளை பெற்றிருந்த பாகிஸ்தான் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தவறிவிட்டது. 2019 பதிப்பில் நான்கு போட்டிகள் வாஷ் அவுட் செய்யப்பட்டன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் மழைக்காலம் குறைந்து வருவதால் இந்த முறை போட்டிகள் நடக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. எனவே, எந்த அணியும் தகுதி பெற குறைந்தபட்சம் ஆறு போட்டிகள் தேவைப்படும். 

ஏழு வெற்றிகள் என்பது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். எனவே இன்னும் 5 ஆட்டங்களில் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா களமிறங்கும். இந்திய அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் அக்டோபர் 14 ஆம் தேதி சனிக்கிழமை அகமதாபாத் மைதானத்தில் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. அதன்பின் இந்தியா புனேவில் வங்கதேசத்தையும், தர்மசாலாவில் நியூசிலாந்து, லக்னோவில் இங்கிலாந்து அணிகளையும், மும்பையில் இலங்கை, கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்கா, பெங்களூருவில் நெதர்லாந்து அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறது.

மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்த டாப் 10 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News