U19 Asia Cup: இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா

U19 ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 07:52 AM IST
  • U19 ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
  • 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
  • இலங்கையை வீழ்த்திய இந்தியாவின் எட்டாவது U19 ஆசிய கோப்பை இது
U19 Asia Cup: இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா  title=

துபாய்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய ஆடவர் அணி, இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற U19 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் (U19 AsiaCup Final), பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து இந்தியா வெற்றிவாகை சூடியது.

தொடக்க ஆட்டக்காரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆட்டமிழக்காமல் அரைசதம் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஒன்பது பதிப்புகளில் எட்டாவது முறையாக U19 ஆசிய கோப்பை கோப்பையை கைப்பற்றியது.

டாஸ் இலங்கைக்கு சாதகமாக இருந்தாலும், ஆடுகளம் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது.  

cricket

38 ஓவர்களில் இலங்கையை 106/9 என்று கட்டுப்படுத்திய பிறகு, அதே ஓவர்களில் இந்தியா 102 ரன்களைத் துரத்த வேண்டியிருந்தது. ஹர்னூர் சிங் 5 ரன்களில் யசிரு ரோட்ரிகோவிடம் ப்ளம்ப் எல்பிடபிள்யூவில் சிக்கியதால், இலங்கைக்கு தொடக்கத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது.

ஸ்கோர்: 38 ஓவர்களில் இலங்கை 106/9 (யசிரு ரோட்ரிகோ 19 நாட் அவுட், ரவீன் டி சில்வா 15; விக்கி ஓஸ்ட்வால் 3/11, கௌஷல் தம்பே 2/23) இந்தியாவிடம் 21.3 ஓவரில் 104/1 என தோற்றது இஅல்ங்கை. இந்தியா (அங்கிரிஷ் ரகுவன்ஷி நாட் அவுட் 56 , ஷேக் ரஷீத் ஆட்டமிழக்காமல் 31; யாசிரு ரோட்ரிகோ 1/12)

ALSO READ | READ ALSO | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் நியூசிலாந்து வீரர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News