ஐபிஎல் 2017: 22-வது லீக், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்

Last Updated : Apr 20, 2017, 12:41 PM IST
ஐபிஎல் 2017: 22-வது லீக், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல் title=

10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.

ஐ.பி.எல். போட்டியின் 22-வது ‘லீக்’ ஆட்டம் இந்தூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளது. 

மும்பை அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. 

கேப்டன் ரோகித் சர்மா, நித்திஷ் ரானா, ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட், மலிங்கா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அதிரடியை சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலானதே. அதே நேரத்தில் சொந்த மண்ணான இந்தூரில் 2 வெற்றி பெற்று இருந்ததால் பஞ்சாப் நம்பிக்கையுடன் உள்ளது.

இரு அணிகள் மோதிய போட்டியில் மும்பை 9 ஆட்டத்திலும், பஞ்சாப் 9 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Trending News