IPL 2020: CSK வீரர் Ruturaj Gaikwad-க்கு மீண்டும் COVID, மீண்டும் quarantine!!

செப்டம்பர் 19 ஆம் தேதி UAE-ல் IPL 2020 துவங்கவுள்ளது. IPL-மிகவும் உறுதியான அணிகளில் ஒன்றான CSK இம்முறை போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே பலவித சவால்களை சந்தித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2020, 07:39 PM IST
  • ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • UAE-க்கு வந்ததிலிருந்து, CSK பல சவால்களை சந்தித்து விட்டது.
  • சுரேஷ் ரெய்னா மற்றும் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் போட்டிகளில் இருந்து விலகினர்.
IPL 2020: CSK வீரர் Ruturaj Gaikwad-க்கு மீண்டும் COVID, மீண்டும் quarantine!! title=

செப்டம்பர் 19 ஆம் தேதி UAE-ல் IPL 2020 துவங்கவுள்ளது. IPL-மிகவும் உறுதியான அணிகளில் ஒன்றான CSK இம்முறை போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே பலவித சவால்களை சந்தித்து வருகிறது. IPL-ல் முதன் முறையாக ஆடப்போகும் CSK அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) மீண்டும் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீண்டும் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆகையால் அவர் அபுதாபியில் (Abu Dhabi) பயிற்சியில் சேர முடியாது. கெய்க்வாட் மற்றும் தீபக் சஹர் (Deepak Chahar) ஆகிய இருவருக்கும் இன்னும் விளையாடுவதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் முதன்முறையாக COVID-19 பரிசோதனையில் நேர்மறையாக சோதிக்கப்பட்டபோது, 14 நாட்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தார். அப்போதும் அவர் அறிகுறியில்லாமல் இருந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ALSO READ: IPL 2020: சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக CSK-வில் சேரப்போகும் அதிரடி ஆட்டக்காரர் இவர்தானா?

மும்பை இந்தியன்ஸுக்கு (Mumbai Indians) எதிரான போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான CSK அணி சில நாட்களில் களத்தில் இருக்கும். IPL போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இரு அணிகளும் செப்டம்பர் 19 அன்று அபுதாபியில் சந்திக்கின்றன.

இரண்டு வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்களில் 13 உறுப்பினர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டதால் CSK அணி கடைசியாகத்தான் பயிற்சியை தொடங்கியது.

UAE-க்கு வந்ததிலிருந்து, CSK பல சவால்களை சந்தித்து விட்டது. வீர்ரகள் வைரஸால் பாதிக்கப்பட்டனர். பல முக்கிய வீரர்கள் போட்டியிலிருந்து வெளியேறி விட்டனர்.

சுரேஷ் ரெய்னா மற்றும் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் ‘தனிப்பட்ட காரணங்களை’ சுட்டிக்காட்டி போட்டிகளில் இருந்து விலகினர்.

ALSO READ: IPL 2020: Commentary குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார் Sanjay Manjrekar: முழு பட்டியல் இதோ!!

Trending News