IPL 2020: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பந்து வீச முடிவு!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியின் டாசில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2020, 07:20 PM IST
  • PL 2020-ன் 9 வது ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
  • ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
  • இரு தரப்பிலும் வலுவான பேட்டிங் உள்ளதால், இன்றைய போட்டி விறுவிறுப்பான த்ரில்லராக இருக்கலாம்.
IPL 2020: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பந்து வீச முடிவு! title=

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் 2020 (IPL 2020) இன் 9 வது ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இதற்கான டாசில் (Toss) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது. 

இரு தரப்பினரும் அபாரமான உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இன்றைய போட்டிக்கு வருவார்கள். தங்களது தொடக்க ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) வலுவான அணியான சென்னை சூப்பர் கிங்சுடன் மோதி வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கிங்ஸ் லெவன் கேப்டன் கே.எல்.ராகுல் (KL Rahul) இந்த பதிப்பின் முதல் சதத்தை அடித்தார். ஆட்டமிழக்காமல் 132 ரன்களை (69 பந்துகளில்; 4x14, 6x7) அடித்தார். இவரது அபார ஆட்டத்தால், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 206 ரன்களை எடுத்தது. RCB-யால் கிங்ஸ் லெவன் அணியின் முருகன் அஸ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய ஸ்பின் இரட்டையருக்கு பதில் சொல்ல முடியவில்லை. RCB 109 ரங்களுக்கு சுருண்டு போக, Kings XI போட்டியின் முதல் வெற்றியைப் பெற்றது.

மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு வித்தியாசமான கதையைக் கொண்டுள்ளது. போட்டிகள் துவங்குவதற்கு முன்னர், ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) தலைமையிலான அணி, அணிகளின் அட்டவணையில் இறுதியாக இருக்கும் என பல நிபுணர்களும் கணித்திருந்தனர். ராயல்ஸ் அணியில் போதுமான அதிரடி ஆட்டக்காரர்களும் திறமையான வீரர்களும் இல்லை என்பது அவர்களது கருத்தாக இருந்தது.

ALSO READ: IPL 2020: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்-வெற்றிவாய்ப்பு யாருக்கு?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:

லோகேஷ் ராகுல், ஹர்பிரீத் ப்ரார், இஷான் பொரெல், மந்தீப் சிங், ஜேம்ஸ் நீஷாம், தாஜிந்தர் சிங், கிறிஸ் ஜோர்டான், கருண் நாயர், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், க்ளென் மேக்ஸ்வெல், முஜீப் உர் ரஹ்மான், சர்பராஸ் கான், ஷெல்டன் கோட்ரெல் மயங்க் அகர்வால், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே, நிக்கோலஸ் பூரன், கிறிஸ் கெய்ல், முருகன் அஸ்வின், ஜெகதீஷா சுசித், கிருஷ்ணப்ப கவுதம், ஹார்டஸ் வில்ஜோன், சிம்ரன் சிங்

பயிற்சியாளர்: அனில் கும்ப்ளே

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஸ்டீவன் ஸ்மித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஆண்ட்ரூ டை, கார்திக் த்யாகி, அங்கித் ராஜ்பூத், ஷ்ரேயஸ் கோபால், ராஹுல் தேவாடியா, ஜெயதேவ் உனத்கட், மயங்க் மார்கண்டே, மஹிபால் லோம்ரோர், ஓஷானே தாமஸ், ரியான் பராக், யஷஸ்வி ஜைஸ்வால், அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், டேவிட் மில்லர், மனன் வோஹ்ரா, ஷாஷாங்க் சிங், வருண் ஆரோன், டாம் குர்ரான், ராபின் ஊத்தப்பா, அனிருத்தா ஜோஷி, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

பயிற்சியாளர்: ஆண்ட்ரூ மெக்டொனால்ட்

ALSO READ: CSKவின் மோசமான ஆட்டத்திற்கு டிவிட்டரில் கிழிக்கும் ரசிகர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News