IPL 2021: CSK vs MI: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது

டெல்லி அருண் ஜெயிட்லி மைதானத்தில் இன்று நடக்கவிருக்கும் CSK vs MI போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 1, 2021, 07:14 PM IST
  • IPL 2021 இன்றைய போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
  • தனது ஆறாவது போட்டியில் ஹைதராபாத் அணியை எளிதாக வென்றது வென்றது CSK
IPL 2021: CSK vs MI: டாஸ் வென்ற  மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது title=

IPL 2021, CSK vs MI: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இந்த IPL பதிப்பில் தனது ஏழாவது போட்டியில் ஆடவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை இன்று CSK அணி எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாகும். டெல்லி அருண் ஜெயிட்லி மைதானத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.

தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்சை எதிர்த்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோல்வியுற்றது. 

இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடிய CSK அணி தனது வழக்கமான அதிரடி பாணியில் ஆடி, எளிதாக வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் (RR) அணியை சுலபமாக தோற்கடித்தது சென்னை அணி. 

நான்காவது போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிகொண்டது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் தன் அமைதியைக் காத்த சென்னை அணி அதிரடி வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டியும் படு டென்ஷனைக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எந்த வித சேலஞ்சையும் அளிக்காமல் மளமளவென சுருண்டது. அந்த போட்டியிலும் சென்னை அணிக்கு ஒரு சுலபமான வெற்றியே கிடைத்தது. டெல்லியில் நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுலபமாக வெற்றி பெற்று தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.

ALSO READ: திணறும் RCB, அசத்திய PBKS! 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி

டெல்லியில் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் சென்னை ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று நாங்காவது இடத்தில் உள்ளது. 

IPL வரலாற்றிலேயே சென்ற ஆண்டுதான் சென்னை ப்ளே-ஆஃப்களுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. IPL-லில் பங்கெடுக்கும் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக CSK இருந்துள்ளது. துவக்க ஆண்டு முதலே, தோற்கடிக்க மிகவும் கடினமான அணி என்ற பெருமையை பெற்றுள்ளது CSK அணி.

கடந்த ஆண்டு மிக மோசமாக ஆடிய CSK அணி, இந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முற்றிலுமாக பூர்த்தி செய்யும் என நம்பப்படுகின்றது. 

குழுக்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், ஷார்துல் தாகூர், லுங்கி என்ஜிடி, தீபக் சாஹர், டுவைன் பிராவா, ராபின் சேதேஸ்வர் புஜாரா, கர்ன் சர்மா, இம்ரான் தாஹிர், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், கிருஷ்ணப்ப கவுதம், மிட்செல் சாண்ட்னர், ரவிஸ்ரினிவாசன் சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கே.எம். ஆசிப், ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா

மும்பை இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், கிருனல் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்ட்யா, நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், ஜஸ்பிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், பியாஷ் சாவ்லா குல்கர்னி, சவுரப் திவாரி, ஆதித்யா தாரே, ஆடம் மில்னே, கிறிஸ் லின், ஜேம்ஸ் நீஷாம், இஷான் கிஷன், அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், மொஹ்சின் கான், அர்ஜுன் டெண்டுல்கர், மார்கோ ஜான்சன், யுத்வீர் சிங்

ALSO READ: தோனிக்கு பதிலாக வரப்போகும் CSK கேப்டன்: முன்னாள் பிளேயர் கொடுத்த shocking தகவல்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News