IPL 2021: DC vs MI, ஹாட்ரிக் வெற்றி பெறுமா மும்பை? டெல்லி - மும்பை மோதல்!

IPL 2021: ஐபிஎல் 2021 போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2021, 05:01 PM IST
IPL 2021: DC vs MI, ஹாட்ரிக் வெற்றி பெறுமா மும்பை? டெல்லி - மும்பை மோதல்! title=

IPL 2021: ஐபிஎல் 2021 போட்டியில் இன்று ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தலைமையில் ரிஷப் பந்த் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக் மைதானத்தில் இரவு 7:30 மணிக்குப் போட்டி துவங்கவுள்ளது. நடப்பு சீசனில் இரு அணிகளுமே இதுவரை தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.

மும்பை அணியைப் (Mumbai Indians) பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் மட்டும் தோற்று கடந்த 2 ஆட்டங்களில் வென்றுள்ளது. எனவே ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் மும்பை அணி உள்ளது. டெல்லி அணியைப் (Delhi Capitals) பொருத்தவரை, தொடக்க வீரா்களில் ஒருவரான ஷிகா் தவன் அட்டகாசமான ஃபாா்மில் இருக்கிறாா். நடப்பு சீசனில் இதுவரை அதிகபட்ச ரன் (186) அடித்த வீரராக அவா் உள்ளாா். அவருடன் இணையும் பிருத்வி ஷா இன்னும் சற்று அதிகம் ஸ்கோா் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. 

மும்பை - டெல்லி அணிகள் ஐபிஎல் தொடரில் (IPL 2021) இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் மும்பை 16 ஆட்டங்களிலும், டெல்லி 12 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

ALSO READ | ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

அணி விவரம்:

மும்பை இண்டியன்ஸ்: ரோஹித் சா்மா (கேப்டன்), ஆடம் மில்னே, ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், அா்ஜுன் டெண்டுல்கா், கிறிஸ் லின், தவல் குல்கா்னி, ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் நீஷம், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரன் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா, மாா்கோ ஜென்சென், மோசின் கான், நேதன் கோல்டா்நீல், பியூஷ் சாவ்லா, குவின்டன் டி காக், ராகுல் சாஹா், சௌரவ் திவாரி, சூா்யகுமாா் யாதவ், டிரென்ட் போல்ட், யுத்வீா் சிங்.</p>

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகா் தவன், பிருத்வி ஷா, அஜிங்க்ய ரஹானே, ஷிம்ரன் ஹெட்மயா், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், அமித் மிஸ்ரா, லலித் யாதவ், பிரவீண் துபே, ககிசோ ரபாடா, அன்ரிச் நாா்ட்ஜே, இஷாந்த் சா்மா, அவேஷ் கான், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிபல் படேல், விஷ்ணு வினோத், லுக்மன் மேரிவாலா, எம்.சித்தாா்த், டாம் கரன், சாம் பில்லிங்ஸ்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) இடையே ஐபிஎல் 2021 போட்டியை எந்த தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பும்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) இடையேயான ஐபிஎல் 2021 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News