IPL 2021: RCB கேப்டன் விராட் கோலிக்கு ₹12 லட்சம் அபராதம்; காரணம் என்ன

மெதுவாக பந்து வீசியது (slow over rate) தொடர்பான குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் கோஹ்லி நடவடிக்கையை எதிர்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 26, 2021, 05:59 PM IST
  • IPL 2021 போட்டியில் RCB கேப்டன் விராட் கோலிக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • MS. தோனி தலைமையிலான சிஎஸ்கே ஆர்.சி.பியின் தொடர் வெற்றிக்கு ஒரு பிரேக் போட்டது
IPL 2021: RCB கேப்டன் விராட் கோலிக்கு ₹12 லட்சம் அபராதம்; காரணம் என்ன title=

மெதுவாக பந்து வீசியது (slow over rate) தொடர்பான குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் கோஹ்லி நடவடிக்கையை எதிர்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 மோதலில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில், 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டியில் மெதுவாக பந்து வீசியது (slow over rate) தொடர்பா ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலிக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மெதுவாக பந்து வீசியது (slow over rate) தொடர்பான குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் கோஹ்லி நடவடிக்கையை எதிர்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில், நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் அற்புதமான ஆட்டம் காரணமாக CSK வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம், எம்.எஸ். தோனி (MS Dhoni) தலைமையிலான சிஎஸ்கே ஆர்.சி.பியின் தொடர் வெற்றிக்கு ஒரு பிரேக் போட்டது, மேலும் இதன் மூலம் புள்ளிகள் அட்டவணையில் கோஹ்லியின் அணியை முதலிடத்தில் இருந்து இறங்கியது.

ALSO READ | CSK vs RCB IPL 2021: மாஸ் வெற்றி பெற்றது CSK, சுருண்டு போனது RCB!

ஐ.பி.எல் இன் தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, தவறு செய்த தரப்பின் கேப்டனுக்கு, முதல் முறையாக எழும் ஸ்லோ ரேட் விகிதத்திற்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இரண்டாவது சந்தர்ப்பத்தில், அணியின் கேப்டனுக்கு அபராதம் இரட்டிப்பாகும் (ரூ. 24 லட்சம்), அதே சமயம் விளையாடும் அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அல்லது ரூ .6 லட்சம், இரண்டில் எது குறைவானதோ, அந்த தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது 

ஒரு சீசனில் மூன்றாவது முறையாக இதே தவறு செய்யப்பட்டா, ​​கேப்டன் ரூ .30 லட்சம் அபராதம் செகுத்துவதோடு, ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். அதே சமயம் விளையாடும் அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அல்லது ரூ .12 லட்சம், இரண்டில் எது குறைவானதோ, அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும்.

ALSO READ | IPL 2021 போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் அஸ்வின்; காரணம் என்ன

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News