ஐபிஎல் 2022: சிஎஸ்கே தோல்விக்கு மொயின் அலி செய்த தவறு காரணமா?

சென்னை அணி லக்னோ அணிக்கு எதிராக தோல்வியை தழுவியதற்கு பீல்டிங்கில் செய்த சில தவறுகள் காரணமாக அமைந்தது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 1, 2022, 03:22 PM IST
  • சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
  • பீல்டிங்கில் சொதப்பிய சென்னை அணி வீரர்கள்
  • மொயீன்அலி கைக்கு வந்த கேட்சை நழுவ விட்டார்
ஐபிஎல் 2022: சிஎஸ்கே தோல்விக்கு மொயின் அலி செய்த தவறு காரணமா?  title=

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்து 210 ரன்கள் குவித்தபோதும் பீல்டிங்கில் செய்த சில தவறுகள் அந்த அணிக்கு தோல்வியை விலையாக கொடுத்தது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சந்திக்கும் 2வது தோல்வி.

மேலும் படிக்க | கொல்கத்தா அணியை அலறவிட்ட ஆர்சிபி அணியின் இளம் வீரர் ஷபாஸ் அகமது யார்?

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி செய்த தவறை, சென்னை அணி நேற்று லக்னோ அணிக்கு எதிராக செய்தது. அதாவது, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி பீல்டிங்கில் சொதப்பியதுபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் கைக்கு வந்த கேட்சுகளை கோட்டைவிட்டனர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கைக்கு வந்த கேட்சை மொயீன் அலி கோட்டை விட்டார். அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டிகாக், 30 ரன்கள் இருந்தபோது பிராவோ பந்தில் கேட்ச் ஒன்றை கொடுத்தார். ஆப்சைடில் நின்று கொண்டிருந்த மொயின் அலி அந்த கேட்சை விட்டதால், டிகாக் 61 ரன்கள் விளாசினார்.

இதேபோல், மற்றொரு வீரர் கே.எல்.ராகுலின் கேட்சையும் சென்னை வீரர்கள் விட்டனர். இந்தமுறை துஷார்தேஷ்பாண்டே வாய்ப்பை நழுவ விட்டார். கடினமான கேட்ச் என்றாலும், அந்த கேட்சை விட்டதால் ராகுல் 26 பந்துகளில் 40 ரன்களை விளாசினார். அதேபோல், ஒரு ஓவர் கூட வீசாமல் இருந்த சிவம் துபேவுக்கு 19வது ஓவர் கொடுக்கப்பட்டது. இந்த ஓவரில் எவின் லீவீஸ் மற்றும் இளம் வீரர் பதோனி ஆகியோர் அதிரடியாக விளையாடி 25 ரன்கள் சேர்த்தனர். இதனால் சென்னை அணியின் வெற்றிக்கனவு தகர்ந்தது. அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இல்லாததும் சென்னை அணிக்கு பின்னடைவாக இருந்தது. இந்த தவறுகளை களைந்து அடுத்தப்போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். 

மேலும் படிக்க | லக்னோ அணியை வீழ்த்த CSK அணிக்குள் என்டிரியாகும் புதிய வீரர் - தோனியின் மாஸ் பிளான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News