IPL 2023: சிஎஸ்கே விளையாடும் போட்டிகள்... முழு விவரம் - மார்க் பண்ணி வச்சுக்கோங்க!

IPL 2023 CSK Schedule: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் நாள், போட்டி நேரம், மைதானம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 18, 2023, 10:09 AM IST
  • தொடரின் முதல் போட்டியில், சென்னை - குஜராத் அணிகள் மோதல்.
  • ஐபிஎல் 1000ஆவது போட்டியில், சென்னை - மும்பை அணிகள் சேப்பாக்கத்தில் மோதுகிறது.
  • சென்னை அணி 7 போட்டிகளை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.
IPL 2023: சிஎஸ்கே விளையாடும் போட்டிகள்... முழு விவரம் - மார்க் பண்ணி வச்சுக்கோங்க! title=

IPL 2023 CSK Schedule: நடப்பாண்டு நடைபெற உள்ள 16ஆவது ஐபிஎல் தொடருக்கான லீக் போட்டிக்களுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. சுமார் 3 சீசன்களுக்கு பின், இந்தியா முழுவதும் ஐபிஎல் தொடரை பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் தொடர் தொடங்க உள்ளது. நாடு முழுவதும் 12 இடங்களில் நடைபெறும் இத்தொடரில், கடந்தாண்டு போலவே 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, குரூப் ஏ பிரிவில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும், குரூப் பி பிரிவில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில், தனது குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் தலா ஒருமுறையும், எதிர் குரூப்பில் உள்ள 5 அணியுடன் தலா இரண்டு முறையும் என விளையாட உள்ளன. இதன்மூலம், ஒரு அணி தலா 14 போட்டி என மொத்தம் 74 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. 

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள், மே 6ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மோத உள்ள போட்டி ஐபிஎல் வரலாற்றில் 1000ஆவது போட்டியாகும். சிறப்பு வாய்ந்த இந்த போட்டியை காண கடும் போட்டாபோட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | IPL 2023 Schedule CSK vs GT: ஐபிஎல் 2023 முதல் போட்டியில் சென்னை - குஜராத் பலப்பரீட்சை

இந்த தொடர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கடைசி தொடராக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதால், சென்னை அணி மீதும் கடும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சுமார் 1400 நாள்களுக்கு பின் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. சேப்பாக்கத்தில் (உள்ளூரில்) 7 போட்டியில் விளையாடும் சிஎஸ்கே, மற்ற போட்டிகளை வெளியூரில் விளையாடுகிறது. தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் நாள், போட்டி நேரம், மைதானம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம். 

சிஎஸ்கே அட்டவணை

மார்ச் 31: குஜராத் - சென்னை ; அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் (Away)- இரவு 7.30 மணி

ஏப்ரல் 3: சென்னை - லக்னோ ; சென்னை சேப்பாக்கம் மைதானம் (Home)- இரவு 7.30 மணி

ஏப்ரல் 8: மும்பை - சென்னை ; மும்பை வான்கடே மைதானம் (Away)- இரவு 7.30 மணி

ஏப்ரல் 12: சென்னை - ராஜஸ்தான் ; சென்னை சேப்பாக்கம் மைதானம் (Home)- இரவு 7.30 மணி

ஏப்ரல் 17: பெங்களூரு - சென்னை ; பெங்களூரு  சின்னசாமி மைதானம் (Away)- இரவு 7.30 மணி

ஏப்ரல் 21: சென்னை - ஹைதராபாத் ; சென்னை சேப்பாக்கம் மைதானம் (Home)- இரவு 7.30 மணி

ஏப்ரல் 23: கொல்கத்தா - சென்னை ; கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் (Away)- இரவு 7.30 மணி

ஏப்ரல் 27: ராஜஸ்தான் - சென்னை ;  ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானம் (Away)- இரவு 7.30 மணி

ஏப்ரல் 30: சென்னை - பஞ்சாப் ; சென்னை சேப்பாக்கம் மைதானம் (Home)- மாலை 3.30 மணி

மே 4: லக்னோ - சென்னை ; லக்னோ BRSABV ஏகானா கிரிக்கெட் மைதானம் (Away)- மாலை 3.30 மணி 

மே 6: சென்னை - மும்பை ; சென்னை சேப்பாக்கம் மைதானம் (Home)- மாலை 3.30 மணி 

மே 10: சென்னை - டெல்லி ; சென்னை சேப்பாக்கம் மைதானம் (Home)- இரவு 7.30 மணி 

மே 14: சென்னை - கொல்கத்தா ; சென்னை சேப்பாக்கம் மைதானம் (Home)- இரவு 7.30 மணி

மே 20: டெல்லி - சென்னை ; டெல்லி அருண் ஜெட்லி மைதானம் (Away)- மாலை 3.30 மணி

சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்குவாட்

எம்எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, கைல் ஜேமிசன், முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரி, மதீஷா சௌத்ரி சிங் , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா.

மேலும் படிக்க | ஐபிஎல் 2023 தொடருக்கு முன்பே சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! ரசிகர்கள் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News