Rewind: தோனியை தூக்க நினைத்த தேர்வுக்குழு! ஸ்ரீநிவாசன் செய்த அதிரடி நடவடிக்கை!

Chetan Sharma Sting Operation: Zee Media நடத்திய மறைமுக ஸ்ட்ரிங் ஆபரேஷனில் பிசிசிஐ-ன் தேர்வாளராக இருக்கும் சேத்தன் சர்மா பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை கூறி உள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Feb 15, 2023, 12:02 PM IST
  • Zee Media மறைமுக ஆப்ரேஷன் நடத்தியது.
  • இதில் பல்வேறு உண்மைகள் வெளிவந்தன.
  • ஊக்கமருந்து சர்ச்சை பெரும் புயலை கிளப்பியுள்ளது.
Rewind: தோனியை தூக்க நினைத்த தேர்வுக்குழு! ஸ்ரீநிவாசன் செய்த அதிரடி நடவடிக்கை! title=

2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்கு பல்வேறு கோப்பைகளை பெற்று தந்த ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததாக ரசிகர்கள் அந்த சமயத்தில் தெரிவித்து வந்தனர்.  தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, பிசிசிஐயின் முன்னாள் தலைவர் என் சீனிவாசன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை கேப்டனாக  தக்கவைத்துக் கொண்டதை பற்றி கூறி இருந்தார்.  2011ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையில் கோப்பையை வென்றது.  அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் இந்தியா இழந்தது.  மேலும், சில தொடர்களில் தொடர் தோல்வியை சந்தித்தது.  இதன் காரணமாக தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க தேர்வுக் குழு முடிவு செய்தது.

csk

மேலும் படிக்க | ஐபிஎல் 2023 தொடருக்கு முன்பே சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! ரசிகர்கள் அதிர்ச்சி

அந்த சமயத்தில் பிசிசிஐ தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன் தேர்வுக்குழுவின் இந்த முடிவை எதிர்த்து தோனியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் படி செய்தார்.  இது குறித்து பேசிய ஸ்ரீனிவாசன், “2011ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியாவில், நாங்கள் டெஸ்டில் சிறப்பாக செயல்படவில்லை. எனவே, தோனி ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்க தேர்வாளர் ஒருவர் விரும்பினார். முக்கிய விஷயம் என்னவென்றால், ஒருநாள் போட்டித் தலைவர் பதவியிலிருந்து அவரை எப்படி நீக்குவது? அவர் சில மாதங்களுக்கு முன்பு உலகக் கோப்பையை வென்றிருந்தார். அவருக்குப் பதிலாக யார் வருவார்கள் என்று தேர்வுக்குழுவினர் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்று கூறி இருந்தார்.  

ஜீ தொலைக்காட்சி நடத்திய ரகசிய சர்வேயில் தற்போது இந்திய அணியின் தேர்வாளராக இருக்கும் சேத்தன் சர்மா, முன்னாள் பிசிசிஐ தலைமை அதிகாரியாக இருந்த கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்காது என்று கூறி உள்ளார்.  விராட் கோலியை கேப்டன் பதிவியில் இருந்து நீக்கியதில் அவருக்கு பங்கு உண்டு என்று கூறி உள்ளார்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பல சாதனைகளை படைத்ததில் விராட் கோலிக்கு முக்கிய பங்கு உண்டு.  அவரது கேப்டன்சியின் கீழ் இந்திய அணி பல வரலாற்று சாதனைகள் படைத்தது.  சேத்தன் சர்மாவின் இந்த பேச்சு தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.  ஒருவேளை, விராட் கோலிக்கு ஒரு ஸ்ரீனிவாசன் கிடைத்து இருந்தால் அவரும் தற்போது கேப்டனாக தொடர்ந்து இருந்து இருப்பார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க | ZEE Exclusive: உளவு கேமராவால் கசிந்த ரகசியங்கள்... கிழியும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முகத்திரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News