ஐபிஎல் 2023: எந்த அணியில் இருந்து எந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டனர் -முழு பட்டியல்

List of Released Players in IPM 2023: பத்து அணிகளில் இருந்து மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 15, 2022, 08:13 PM IST
  • 10 அணிகளில் இருந்து மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
  • டிசம்பர் 23 ஆம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் -பிசிசிஐ.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா தக்கவைப்பு.
ஐபிஎல் 2023: எந்த அணியில் இருந்து எந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டனர் -முழு பட்டியல் title=

ஐபிஎல் 2023 தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளதால், அனைத்து அணிகளும் தங்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 10 அணிகளில் இருந்து மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக சில முக்கிய வீரர்களையும் அணிகள் வெளியேற்றி உள்ளது. அவர்களில் கேன் வில்லியம்சன், மயங்க் அகர்வால், கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், அஜிங்க்யா ரஹானே, ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜேசன் ஹோல்டர் போன்றோர் ஆவார்கள். இவர்களை மலிவான விலையில் மீண்டும் வாங்க சில அணிகள் விரும்புகின்றன என்பதை இங்கே கவனிக்க வேண்டியுள்ளது. 

எந்த அணியில் இருந்து எந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்:

சென்னை சூப்பர் கிங்ஸ்
டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், சாரிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனிஷ்வர் கௌதம், சயான் மிலிந்த், லூவ்னீத் சிசோடியா, ஷெரிஃபின் ரூதர்ஃபோர்ட்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, சீன் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்.

மும்பை இந்தியன்ஸ்
கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பாசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்.

மேலும் படிக்க: ஐபிஎல் 2023 சிஎஸ்கே பட்டியல்: ரவீந்திர ஜடேஜா தக்கவைப்பு டுவைன் பிராவோ விடுவிப்பு

டெல்லி கேபிடல்ஸ் 
ஷர்துல் தாக்கூர், டிம் சீஃபர்ட், அஷ்வின் ஹெப்பர், கேஎஸ் பாரத், மன்தீப் சிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், ஷிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
அனுனய் சிங், கார்பின் போஷ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கூல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜஸ் பரோகா.

மேலும் படிக்க: தோனி செய்த கடைசி நிமிட மாற்றம்! இந்த வீரர்கள் CSK-யில் இனி இல்லை!

பஞ்சாப் கிங்ஸ்
மயங்க் அகர்வால், உண்டன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரல், அன்ஷ் படேல், பிரேரக் மன்கட், சந்தீப் சர்மா, விருத்திக் சட்டர்ஜி.

குஜராத் டைட்டன்ஸ்
ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன், டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங் மான், ஜேசன் ராய், வருண் ஆரோன்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ஆண்ட்ரேவ் தயே, அங்கித் ராஜ்புத், துஷ்மந்த சமிரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம்.

மேலும் படிக்க: T20 World Cup 2022 Final: 'சிஎஸ்கே தான் என் வெற்றிக்கு காரணம்' உலகக்கோப்பை நாயகன் சாம் கரன் பெருமிதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News