ஐபிஎல் 2023 சிஎஸ்கே பட்டியல்: ரவீந்திர ஜடேஜா தக்கவைப்பு டுவைன் பிராவோ விடுவிப்பு

சிஎஸ்கே ஐபிஎல் 2023 வீரர்கள் பட்டியல்: ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டதால் எம்எஸ் தோனி தலைமையிலான அணி டுவைன் பிராவோவை விடுவித்தது

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 15, 2022, 07:38 PM IST
  • வரும் டிசம்பர் 23 ஆம் தேதி ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம் நடைபெறும் -பிசிசிஐ
  • தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15க்குள் அறிவிக்க வேண்டும்.
  • சிஎஸ்கே அணியுடன் ரவீந்திர ஜடேஜாவுக்கு கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
ஐபிஎல் 2023 சிஎஸ்கே பட்டியல்: ரவீந்திர ஜடேஜா தக்கவைப்பு டுவைன் பிராவோ விடுவிப்பு title=

ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரால் ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) உடனான தனது பயணத்தை தொடர்வார். ஐபிஎல் 2022 தொடருக்கு பிறகு, சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் சுமுகமான உறவு நீட்டிக்கவில்லை. ஏனென்றால் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சுயவிவரத்தில் இருந்து CSK தொடர்பான அனைத்து இடுகைகளையும் நீக்கிவிட்டார். சிஎஸ்கே அணியுடன் கருத்து வேறுபாடு நிலவி வந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறி விடுவார், வேறொரு அணிக்கு சென்றுவிடுவார் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அவர் எங்கும் செல்லவில்லை, மீண்டும் எம்எஸ் தோனியின் கீழ் விளையாடுவார். 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளதால், அதாவது வரும் டிசம்பர் 23 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இதன்காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-க்குள் அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: தோனி செய்த கடைசி நிமிட மாற்றம்! இந்த வீரர்கள் CSK-யில் இனி இல்லை!

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:

எம்.எஸ்.தோனி, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதிஷ் பத்ரானா, சீமர்ஜித் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகிஷ் திங்க்ஷன், 

விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:

டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன்.

மேலும் படிக்க: T20 World Cup 2022 Final: 'சிஎஸ்கே தான் என் வெற்றிக்கு காரணம்' உலகக்கோப்பை நாயகன் சாம் கரன் பெருமிதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News