ஐபிஎல்-ல் ஒரு போட்டியின் மதிப்பு இத்தனை கோடியா? வெளியான தகவல்!

ஐபிஎல்-ல் நடைபெறும் ஒரு போட்டியின் மதிப்பு இந்த ஆண்டு ஏலத்தில் 105 கோடியாக உயர்ந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 13, 2022, 12:49 PM IST
  • ஐபிஎல் போட்டியின் மதிப்பு இப்போது INR 105 கோடியாக உயர்ந்துள்ளது.
  • இதுவரை மொத்த ஏலத்தொகை INR 38,850 கோடி.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஏலம் நடைபெற்று உள்ளது.
ஐபிஎல்-ல் ஒரு போட்டியின் மதிப்பு இத்தனை கோடியா? வெளியான தகவல்! title=

அடுத்த ஐந்து ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.  இதில் ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு இப்போது INR 105 கோடியாக (USD 13.44 மில்லியன்) உயர்ந்து சாதனை படைத்துள்ளது.  இதனால் உலகிலேயே அதிக லாபம் தரும் விளையாட்டு பொடியாக ஐபிஎல் மாறியுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டி20 போட்டியின் ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்த ஏலத்தொகை INR 38,850 கோடி (USD 4.97 பில்லியன்) - இது INR 21,090 கோடி (USD 2.7 பில்லியன்) தொகுப்பு A (இந்திய துணைக் கண்டத்திற்கான தொலைக்காட்சி உரிமை) மற்றும் INR 17,760 கோடி (USD 2.27 பில்லியன்) தொகுப்பு B. (இந்திய துணைக் கண்டத்திற்கான டிஜிட்டல்); இது ஏற்கனவே 2018-22 ஐபிஎல் உரிமை ஒப்பந்தத்தை விட 2.38 மடங்கு அல்லது 138% அதிகமாகும், 2017 இல் ஸ்டார் இந்தியா $2.55 பில்லியனுக்கு வாங்கியது.

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை அதிகரிக்க பிசிசிஐ முடிவு! புதிய விதிகள் அமல்!

 

இந்த எண்கள் 2023-ல் தொடங்கும் அடுத்த ஐந்தாண்டு உரிமைச் சுழற்சியில் ஒரு சீசனுக்கு 74 ஆட்டங்கள் நடைபெறுவதை அடிப்படையாகக் கொண்டவை. ஐபிஎல் ஏலம் இந்த ஆண்டு, அதன் ஊடக உரிமைகளை முதன்முறையாக மின்-ஏலத்தின் மூலம் விற்பனைக்கு வைத்தது. மின்-ஏலத்தில், ஒரு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஆன்லைன் போர்ட்டல் மூலம் ஏலம் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஏலத்திற்காக, ஐபிஎல் நான்கு பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச அடிப்படை விலையை நிர்ணயித்தது மற்றும் ஏலதாரர்களை ஒரு போட்டியின் அடிப்படையில் அவற்றின் விலையை பட்டியலிடுமாறு கேட்டுக் கொண்டது. பேக்கேஜ் A க்கு ஒரு போட்டிக்கான அடிப்படை விலை INR 49 கோடி (USD 6.3 மில்லியன்). தொகுப்பு Bக்கு ஒரு போட்டிக்கு INR 33 கோடி (USD 4.2 மில்லியன்) ஆகும். தொகுப்பு Cக்கு ஒரு போட்டிக்கு INR 16 கோடி (USD 2.05 மில்லியன்) ஆகும். பேக்கேஜ் Dக்கு INR 3 கோடி (USD 390,000).

ஞாயிற்றுக்கிழமை, ஏ மற்றும் பி தொகுப்புகான ஏலம் நடைபெற்றது.  A பேக்கேஜ் ஏலத்தில் INR 57 கோடி (USD 7.29 மில்லியன்) - ஐபிஎல் நிர்ணயித்த அடிப்படை விலையை விட 16.3% அதிகம். பேக்கேஜ் B-க்கான அதிகபட்ச ஏலம் 48 கோடி ரூபாய் (6.14 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும், இது அடிப்படை விலையை விட 45.4% அதிகம். முந்தைய ஐபிஎல் உரிமை ஒப்பந்தத்தில் (INR 54.23 கோடி) ஒரு போட்டி மதிப்பை விட அதிகரித்து 105 கோடியாக உயர்ந்துள்ளது.  இது 93.6% அதிகம் ஆகும்.

ஏலத்தில் டிஸ்னி-ஸ்டார், சோனி, வயாகாம்-ரிலையன்ஸ், ஜீ, ஃபன் ஏசியா, சூப்பர் ஸ்போர்ட் மற்றும் டைம்ஸ் இன்டர்நெட் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.  ஐபிஎல் நிர்ணயித்த விதிகளின்படி, பேக்கேஜ் A இன் வெற்றியாளருக்கு, பேக்கேஜ் B இல் அதிக ஏலம் எடுத்தவருடன் டிஜிட்டல் உரிமைகளுக்காகப் போட்டியிடும் உரிமை உள்ளது. அவர்களில் ஒருவர் வெளியேறும் வரை ஏல செயல்முறை தொடரும். A மற்றும் B தொகுப்புகளுக்கான அதிக ஏலதாரர் தீர்மானிக்கப்பட்டதும், C & D தொகுப்புகளுக்கான ஏல செயல்முறை தொடங்கும்.

மேலும் படிக்க | நான் மட்டும் இருந்திருந்தா... 2011 World cup பற்றி கொளுத்திப் போட்ட அக்தர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News