IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு IPL வரலாறு இதோ!

Chennai Super Kings History: 12 முறை பிளே ஆப், 10 முறை இறுதிப்போட்டி, 4 முறை சாம்பியன் என ஐபிஎல் வரலாற்றில் தனித்த அடையாளத்தை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடந்த கால செயல்பாட்டை முழுமையாக இங்கு காணலாம். 

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Sudharsan G | Last Updated : May 28, 2023, 07:44 AM IST
  • குஜராத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இறுதிப்போட்டியில் மோதுகிறது.
  • கேப்டன் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி நான்கு கோப்பைகளை வென்றுள்ளது.
  • 2020, 2022 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.
IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு IPL வரலாறு இதோ! title=

Chennai Super Kings Rewind: 16ஆவது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனை விட சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உடன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனை சேர்த்து, மொத்தம் 14 சீசன்களில் விளையாடி உள்ளது. 2016, 2017 என இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்கு தடைவிதிக்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது. அந்த அணி, இதுவரை 12 சீசன்களில் பிளே ஆப் வரை முன்னேறி 10 முறை இறுதிப்போட்டிக்கும் வந்துள்ளது. 

நான்கு முறை கோப்பை வென்ற சிஎஸ்கே, 2020, 2022 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. அந்த வகையில், கடந்த காலங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2023 போட்டியில் சென்னை அணியின் வெற்றியின் சீக்ரெட் இதுதான்!

இதுவரை சிஎஸ்கே!

- 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியிடம் தோற்று ரன்னர் அப் ஆனது

- 2009ஆம் ஆண்டை பொருத்தவரை செமி பைனல்சில் பெங்களூரு  அணியிடம் தோற்று வெளியேறியது சென்னை அணி 

- 2010ஆம் ஆண்டைப் பொருத்தவரை பைனல் போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது

- 2011ஆம் ஆண்டு பைனல் போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி ஆர் சி பி அணியுடன் மோதியது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது

- 2012ஆம் ஆண்டை பொருத்தவரை கொல்கத்தா அணியுடன் ஃபைனல் போட்டியில் தோற்றதால் ரன்னர் அப்பாக வெளியேறியது சிஎஸ்கே அணி.

- 2013ஆண்டும் சென்னை அணி பைனல் வரை சென்றது ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து ரன்னர் அப் ஆனது

- 2014ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் குவாலிஃபயர் 2 போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது சிஎஸ்கே

- 2015ஆம் ஆண்டு பைனல் வரை சென்ற சிஎஸ்கே அணி மும்பை அணியிடம் தோற்று ரன்னர் அப் ஆனது

- 2016,2017 ஆம் ஆண்டுகளில் சென்னை அணி ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை இருந்தது. மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

- 2018ஆம் ஆண்டு தடை முடிந்த பிறகு மறுபடியும் சிறப்பாக விளையாடி பைனலுக்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று சிஎஸ்கே கோப்பையை வென்றது

- 2019ஆம் ஆண்டை பொருத்தவரை பைனல் போட்டிக்கு முன்னேறிய சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. . இதில் சிஎஸ்கே ரன்னர் அப் ஆனது

- 2020ஆம் ஆண்டடை பொறுத்தவரை சென்னை அணி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்ததால் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை

- 2021சென்னை அணி இறுதிப்போட்டி வரை சென்றது இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது

- 2022 ஐபிஎல் சென்னை அணி ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாக தான் அமைந்தது சென்னை அணி ரொம்பவே சொதப்பி ஒன்பதாவது இடத்தை பிடித்திருந்தார்கள

IPL பைனலுக்கு அதிகம் முறை முன்னேறிய அணிகள்

- 10  முறை ஐபிஎல் பைனல் போட்டிக்கு முன்னேறி இருக்கும் ஒரே அணி, என்ற மகத்தான ஒரு சாதனையை படைத்திருக்கிறது சிஎஸ்கே. 

- மும்பை இந்தியன்ஸ் அணியை பொருத்தவரை 6 முறை பைனல் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது 

- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று முறையும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 முறையும் கடந்த காலங்களில் பைனல் போட்டிக்கு முன்னேறி உள்ளது. 

- இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, குஜராத் டைட்டன்ஸ் தலா 2 முறை பைனல் போட்டிக்கு முன்னேறி உள்ளது 

- இவை தவிர டெக்கான் சார்ஜஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் , ரைசிங் புனே சூப்பர் செயின்ஸ், டெல்லி கேப்பிட்டல்  ஆகிய அணிகள் 1 முறை பைனல் போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டிகளில் சிஎஸ்கே!

2008

ஐபிஎல் தொடர் ஆரம்பமான 2008 ஆம் ஆண்டு சென்னை அணி பைனல் போட்டிக்கு முன்னேறி இருந்தது அந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட சென்னை அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான்  அணியிடம்  தோல்வி அடைந்தது சென்னை

2010

கடந்த 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக சென்னை அணி கோப்பையை வென்று அசத்திருந்தது அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்து முதன் முதலாக கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி

2011

2011 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றியது சிஎஸ்கே அணி

2012

2012 ஆம் ஆண்டு சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது கொல்கத்தா

2013

2013 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. கடந்த 2010 ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான பைனல் போட்டி சென்னைக்கு சாதகமாக அமந்தது. ஆனால் 2013 ம் ஆண்டு அப்படி இல்லை இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய மும்பை அணி சென்னை அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கோப்பையை கைப்பற்றியது மும்பை.

2015

2015 ஆம் ஆண்டு மறுபடியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. அதுவும் மும்பை அணிக்கு சாதகமாக அமைந்தது. இந்த போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றியது.

2018

2018 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் சென்னை அணி சன் ரைஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது இந்த போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது சிஎஸ்கே

2019

2019 ஆம் ஆண்டு நடந்த  பைனல் போட்டியில் சென்னை அணி நான்காவது முறையாக மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த முறையும் சென்னை அணி தோல்வியடைந்தது . இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

2021

கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பைனல் போட்டிக்கு முன்னேறின இந்த போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியது

2021 க்கு பிறகு சென்னை அணி இப்போது (2023 இல்) ஃபைனல் போட்டிக்கு வந்துள்ளது. இதில் நடப்பு ஐபிஎல் சாம்பியனான குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளும் சம பலத்தில் இருக்கும் நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

மேலும் படிக்க | சம்பவம் செய்ய காத்திருக்கும் சுப்மன் கில்... மிரட்டும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News