CSK vs PBKS: தோனி அறைந்த கடைசி 2 சிக்ஸர்கள்... கான்வே அதிரடியால் பஞ்சாப்புக்கு இமாலய இலக்கு

IPL 2023 CSK vs PBKS: ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 30, 2023, 05:48 PM IST
  • கான்வே 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
  • அதில், 16 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடக்கம்.
CSK vs PBKS: தோனி அறைந்த கடைசி 2 சிக்ஸர்கள்... கான்வே அதிரடியால் பஞ்சாப்புக்கு இமாலய இலக்கு title=

IPL 2023 CSK vs PBKS: நடப்பு ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப். 30) மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பிளேயிங் லெவனில் மாற்றம் ஏதும் செய்யவில்லை, பஞ்சாப் அணி ஒரே ஒரு மாற்றத்தை செய்தது. கடந்த லக்னோ உடனான போட்டியில் அறிமுகமான குர்னூர் பிரருக்கு பதிலாக ஹர்பிரீத் பிரர் சேர்க்கப்பட்டார். போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தோனி எடுத்த முடிவு

இந்த ஆடுகளத்தில், முதல் இன்னிங்ஸில் சராசரியாக 140-150 ரன்கள் குவிக்க முடியும் என்பதால், அதைவிட 30-40 ரன்கள் கூடுதலாக எடுத்து எதிரணிக்கு சவால் அளிக்கும் நோக்கில் தோனி இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளும் விதமாகவே, சென்னை அணியின் தொடக்கமும் அமைந்தது. வழக்கம்போல், லெப்ட் - ரைட் காம்பினேஷனில் கான்வே - கெய்க்வாட் மிரட்டினர். 

மேலும் படிக்க | IPL 2023: ரிங்கு சிங்கின் அன்றைய வெறியாட்டத்திற்கு பழிதீர்த்தது குஜராத்... வெற்றியை பெற்று தந்த தமிழக வீரர்!

நல்ல தொடக்கம்

இந்த ஜோடி பவர்பிளே ஓவர்களில் விரைவாக ரன்களை குவித்தது. 6 ஓவர்களில் 56 ரன்களை எடுத்தது, இந்த ஜோடி. சிறப்பாக விளையாடி வந்த கெய்க்வாட் 37(31) ரன்களில் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் அதிரடியை தொடர்ந்த கான்வே அரைசதம் கடந்து அசத்தினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய தூபேவும் விரைவாக ரன்களை எடுத்தார். அவர் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி என 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஜோடி சேர்ந்த கான்வி - மொயின் அலி ஜோடி, லிவிங்ஸ்டன் வீசிய 15ஆவது ஓவரில் 16 ரன்களை குவித்தது. 

தோனி அடித்த சிக்ஸர்கள்

மொயின் அலி 10 ரன்களுடனும், ஜடேஜா 12 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். சென்னை அணி 19.1 ஓவர்களில் 185 ரன்களுடன் இருந்தது. தோனி அப்போது களமிறங்கினார். அப்போது, கடைசி 2 பந்துகளிலும் தோனி, 2 சிக்ஸர்களை பறக்கவிட, ஸ்கோர் 200 ஆக உயர்ந்தது. 

16 பவுண்டரிகள்

4 விக்கெட்டுகளை மட்டும் சிஎஸ்கே இழந்திருந்த நிலையில், கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 92 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், சாம் கரன், ராகுல் சஹார், சிக்கந்தர் ராஸா உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டை மட்டும் கைப்பற்றினர். 201 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் பேட்டிங் செய்து வருகிறது. 

மேலும் படிக்க | IPL 2023 DC vs SRH: ரிவஞ் எடுத்த ஹைதராபாத்... சொந்த மண்ணில் டெல்லிக்கு தோல்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News