CSK vs RR: சொந்த மண்ணிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்

IPL 2023 Match 17 CSK vs RR:  ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 12, 2023, 11:46 PM IST
  • 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி
  • 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி
  • ராஜஸ்தான் அணி சென்னை மண்ணில் வெற்றியை பதிவு செய்தது
CSK vs RR: சொந்த மண்ணிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் title=

சென்னை: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நான்காவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்றுப் போனது. இன்று (ஏப்ரல் 12) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் சிறப்பான பார்மில் இருந்த நிலையில், வெற்றி பெறும் அணி எது என்று அனைவரும் ஆவலாக காத்திருந்த நிலையில், சென்னை அணியின் தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 76 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் மட்டை வீச களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மொத்தம் 175 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளை வீழ்த்திய பிறகு, புதிய ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் அணியின் பேட்டர்கள் சிறந்த ஃபார்மில் உள்ளனர், குறிப்பாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் என மூவர் அணி பலமாக உள்ளது. இந்த சீசனில் மூன்று ஆட்டங்களிலும் ராஜஸ்தான் 190-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளது.

மேலும் படிக்க: தோனி செய்யப்போகும் மிகப்பெரும் சாதனை... காத்திருக்கும் சேப்பாக்கம்!

சென்னை அணிக்கு எதிராக, சந்தீப் ஷர்மா கடைசி ஓவரில் 21 ரன்களை அடித்தார். தோனியும் ரவீந்திர ஜடேஜாவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தாலும் இறுதியில், மிடில்-ஓவர் கட்டத்தில் சிஎஸ்கேயின் மிடில்-ஆர்டர் சில ரன்களைப் பெறவில்லை. இது ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் ஏமாற்றமளிக்கும் தொடக்கத்திற்குப் பிறகு, இன்று தோனியின் 200வது கேப்டன்சியில் அணி சொந்த மண்ணில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், நம்பிக்கை பொய்த்துப் போனது.

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியிடம் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, ஆனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. 

சென்னை vs ராஜஸ்தான்: அதிக போட்டியில் வெற்றி யாருக்கு?
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ஆட்டங்களில் 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய வெற்றியுடன் சேர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  

மேலும் படிக்க: 'இது முத்துப்பாண்டி கோட்டை' இன்று சிஎஸ்கே ஜெயிக்கவே அதிக வாய்ப்பு... எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News