MS Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் சரித்திரம் படைக்கும் முனைப்பில் உள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மகேந்திர சிங் தோனி களமிறங்கும்போது, ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்துவார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டி மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் சிறப்பானதாகும். ஆம், மகேந்திர சிங் தோனி தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக விளையாட உள்ளார்.
Tonight is going to be LIT!#Thala200 #WhistlePodu pic.twitter.com/hQL492WeS6
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2023
இந்த மைல்கல்லை வெற்றியுடன் கொண்டாட விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தனது 200வது போட்டியில் விளையாடுகிறார், இதில் அவருக்கு வெற்றியை பெற்று தர உதவுவேன் என ஜடேஜா நம்பிக்கை தெரிவித்தார்.
ஜடேஜா அளித்த பேட்டியில், 'நான் என்ன சொல்ல வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான். அவருக்கு எல்லா வாழ்த்துக்களையும் தெரிவிக்க விரும்புகிறேன். ராஜஸ்தான் உடனான போட்டியில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். சிஎஸ்கே கேப்டனாக 200ஆவது போட்டியில் தோனிக்கு வெற்றி பரிசை வழங்க முயற்சி செய்வேன்.
கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதம், அதனை தொடர்வோம் என்று நம்புகிறோம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான ரிதத்தில் இயங்குகிறது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது" என்றார்.
ஐபிஎல்லின் 13 சீசன்களில் 11இல் சிஎஸ்கேவை பிளேஆஃப் வரை கூட்டிச்சென்றவர், தோனி. இவர் ஐபிஎல் அணியின் கேப்டனாக 213 போட்டிகளில் விளையாடியுள்ளார். எம்எஸ் தோனியின் கீழ், சிஎஸ்கே 9 முறை இறுதிப் போட்டிக்கு வந்து நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. சிஎஸ்கேவின் கேப்டனாக 199 போட்டிகளில், ராஞ்சி வீரன் நம்பமுடியாத 60.61% வெற்றி சதவீதத்துடன் 120 வெற்றிகளுக்கு அணியை வழிநடத்தியுள்ளார்.
மேலும் படிக்க | IPL 2023: அரைசதம் அடித்தும் கொண்டாடாத ரோஹித் சர்மா - காரணம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ