அசத்தும் அர்ஜூன் டெண்டுல்கர்! கவனத்தை ஈர்க்கும் இரட்டை சகோதரர்கள்!

2023 ஐபிஎல் கடந்த மாதம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது, அதில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.  

Written by - Ezhilarasi Palanikumar | Last Updated : Apr 19, 2023, 05:25 PM IST
  • தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்.
  • ஹைதராபாத் போட்டியில் வீழ்த்தினார்.
  • மும்பை வீரர்கள் ஆரவாரமாக கொண்டாடினர்.
அசத்தும் அர்ஜூன் டெண்டுல்கர்! கவனத்தை ஈர்க்கும் இரட்டை சகோதரர்கள்! title=

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 25வது லீக் போட்டியில் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்தது. இந்த நிலையில்193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முக்கியமான நேரத்தில் பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 

மேலும் படிக்க | Arjun Tendulkar: ஆர்சர், பும்ரா இடத்தை நிரப்பிய அர்ஜுன்... மும்பையின் எதிர்காலம் இவர் தானா?

இதன் மூலமாக 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 2.5 ஓவர்களை வீசி 18 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இதன் மூலமாக அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவருக்கு சக வீரர்களும் ரசிகர்களும் தற்போது சமூக ஊடகங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அர்ஜுன் டெண்டுல்கரை பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்து இருந்தாலும் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் பயிற்சியில் இருந்த பின்னரே அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.

ஏற்கனவே அர்ஜூன் டெண்டுல்கரின் தந்தையான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து 2013 வரை விளையாடி இருக்கிறார். இப்போது 2023 ஆம் ஆண்டு தனது தந்தை விளையாடிய அதே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் விளையாடுகிறார். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல் தந்தை விளையாடிய அதே அணியில் மகன் இப்போது விளையாடுவது  ஒரு மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது. 

தந்தை மகன் ஒரே அணிக்காக விளையாடுவது கவனம் பெற்று வரும் அதே வேளையில் இதே போன்று மற்றொரு சாதனை சத்தம் இல்லாமல் நடந்திருக்கிறது. Twin சகோதரர்கள் ஐபிஎல்-ல் வெவ்வேறு அணியில் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பாக பல அண்ணன் தம்பிகள் ஐபிஎல்லில் விளையாடி இருக்கிறார்கள் எடுத்துக்காட்டாக Albie morkel - Morne morkel , Sam curren-Tom curren, yussouf pathan-Irfan pathan என பலரும் இருந்திருந்தாலும் இரட்டை சகோதரர்களான Macro Jensen - Duan Jensen ஐபிஎல் விளையாடி வருவது ஸ்பெஷல் கவனத்தை ஈர்த்து வருகிறது. வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருக்கும் இவர்கள் சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். இதில் Duan Jensen மும்பை இந்தியன்ஸ் அணையிலும் Macro Jensen சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிலும் விளையாடி வருகின்றனர்.

மேலும் படிக்க | அந்த மனசு இருக்கே... கஷ்டப்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ரிங்கு சிங் - எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News