கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்த சீசனில் மும்பை அணி மீண்டும் பழைய பார்மிற்கு திரும்பி இருந்தது. இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் எதிர்கொண்டது மும்பை அணி. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி நல்ல துவக்கம் கொடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்துகளில் 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார், மறுபுறம் அதிரடியாக ஆடிய இசான் கிஷன் 31 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் 7 ரன்களுக்கு வெளியேறினார். பின்பு ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் கிரீன் கூட்டணி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
Maiden fifty for our boy frvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL pic.twitter.com/Lik6hpEaHc
— Mumbai Indians (@mipaltan) April 18, 2023
கிரீன் கடைசிவரை அவுட்டாகாமல் 64 ரன்கள் குவித்தார். திலக் வர்மா அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குறித்தது. ஹைதராபாத் அணியில் நடராஜன் நான்கு ஓவருக்கு 50 ரன்கள் விட்டுக் கொடுத்தார். சிறிது கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாரி புரூக் ஒன்பது ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திருப்பாதி ஏழு ரன்களுக்கு ஆட்டம் இழந்தார், அடுத்து இறங்கிய அபிஷேக் சர்மாவும் ஒரு ரன்னில் அவுட் ஆனார்.
]mily #SRHvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL pic.twitter.com/T2g3fNjglH
— Mumbai Indians (@mipaltan) April 18, 2023
இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் மயங்க் அகர்வால் நிதானமாக விளையாடி 41 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். பியூஸ் சாவ்லாவின் ஓவரில் ஹென்ரிச் கிளாசென் நாலா புறமும் தெறிக்க விட்டார். ஆனால் கடைசி பந்தில் அவுட் ஆகி 16 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அதிரடியாக ரன்கள் குவித்தார். இங்கு வரை சன்ரைசஸ் வெற்றி பெறலாம் என்று எண்ணம் இருந்தது. மும்பை அணியின் துல்லியமான பௌலிங்கால் சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தது. இறுதியில் 19.5 ஓவரில் சன்ரைசஸ் 10 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்த போட்டியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கும் தற்போது முன்னேறி உள்ளது.
baiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL pic.twitter.com/uIuD3tY5w1
— Mumbai Indians (@mipaltan) April 18, 2023
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ