தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..!

தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலில் ஈடுபட்டிருப்பாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கர்மா நிச்சயம் தண்டிக்கும் என அவர் போட்டிருக்கும் டிவிட்டர் பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 22, 2023, 06:57 PM IST
தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..! title=

ஜடேஜாவுக்கும் தோனிக்கும் இடையே டெல்லி போட்டியின்போது நடைபெற்ற உரையாடல் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, அவர்களுக்குள் மீண்டும் மோதல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. ஈகோ யுத்தத்தில் இருக்கும் ஜடேஜா, சென்னை அணிக்கு முழு மனதுடன் விளையாடுவதற்கு தயாராக இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் 3 முறை ஆட்ட நாயகன் விருது வென்றபோதும், ஜடேஜாவின் செயல்பாடுகளில் சென்னை அணியின் ரசிகர்கள் ஈர்ப்பு ஏற்படவில்லை. அதே மனநிலையில் ஜடேஜாவும் இருக்கிறார். இது குறித்து ஆட்டநாயகன் விருது வென்றபோது ஒருமுறை வெளிப்படையாகவும் பேசினார்.

மேலும் படிக்க | இனி பும்ரா தேவையில்லை! இந்திய அணிக்கு கிடைத்த புதிய யார்க்கர் ஸ்பெசலிஸ்ட்!

அதில், நான் பேட்டிங் செய்ய களமிறங்கும்போதெல்லாம், நான் சீக்கிரம் அவுட்டாக வேண்டும் என ரசிகர்கள் எண்ணுகிறார்கள். தோனி களத்துக்கு வரவேண்டும் என்பதற்காக என்னை அவுட்டாக வேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர். இது எந்த மாதிரியான சப்போர்ட் என எனக்கு புரியவில்லை என தெரிவித்திருந்தார். இப்போது அவர் போட்டிருக்கும் மற்றொரு டிவிட் மீண்டும் சென்னை அணிக்குள் பூகம்பம் வெடித்திருப்பதை காட்டுவதாக ரசிகர்கள் கிளப்பிவிட்டுள்ளனர். ஜடேஜா போட்ட லேட்டஸ்ட் டிவிட்டர் பதிவில், உங்கள் கர்மா உங்களை தேடி நிச்சயம் வரும். அது விரைவாகவோ அல்லது மெதுவாகவோ வரலாம். ஆனால் கண்டிப்பாக வரும்! என்று பதிவிட்டு இருக்கிறார். 

எதற்காக இப்போது இப்படி பதிவிட்டிருக்கிறார்? இதற்கான காரணம் என்ன? என ரசிகர்கள் வினவ தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ஜடேஜாவுக்கும் சென்னை அணிக்கும் இடையே புகைச்சல் இருந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அவருக்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டு பின்பு அந்த கேப்டன்சி பறிக்கப்பட்டு மகேந்திர சிங் தோனியிடம் மீண்டும் கொடுக்கப்பட்டது. இது ரவீந்திர ஜடேஜாவை மிகவும் பாதித்த ஒன்றாக அமைந்திருந்தது. இதன் காரணமாகவே அவர் கடந்த தொடரின் இறுதியிலிருந்து காயத்தின் பெயரில் அணியில் இருந்து விலகிக் கொண்டார் என்று கூறப்பட்டது.

இதற்குப் பிறகு தொடர்ச்சியாக ரவீந்திர ஜடேஜாவின் சமூக வலைதள பதிவுகள் அவரது மன வருத்தத்தைக் குறிப்பதாகவே வந்து கொண்டிருந்தது. பின்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அப்படியான பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று தெரிவித்து, இந்த ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட வந்தார். இதனால் அந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அதே மன நிலைக்கு ஜடேஜா சென்றிருப்பது, ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | ஆர்சிபியின் கனவை சிதைத்த சுப்மன் கில்... பிளேஆப் சென்றது மும்பை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News