KKR vs RR: கொல்கத்தாவை பந்தாடிய ஜெய்ஸ்வால்! ராஜஸ்தான் தெறி வெற்றி!

KKR vs RR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 11, 2023, 11:08 PM IST
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி.
  • புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.
  • ஜெய்ஸ்வால் 98 ரன்கள் குவித்தார்.
KKR vs RR: கொல்கத்தாவை பந்தாடிய ஜெய்ஸ்வால்! ராஜஸ்தான் தெறி வெற்றி! title=

KKR vs RR: ஐபிஎல் 2023 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50 போட்டிகளுக்கு மேல் முடிவடைந்தும் யார் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இன்று இந்தியன் பிரீமியர் லீக் 2023ன் 56வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது, டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்தது.

பந்து வீச்சில் சிறந்து விளங்கக்கூடிய ராஜஸ்தான் அணி இந்த போட்டியிலும் சிறப்பாக பந்து வீசியது. அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராயின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே ஹெட்மயரின் ஒரு சிறப்பான கேட்சின் மூலம் கைப்பற்றியது.  மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குர்புஸ் 18 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற்றினார்.  அதன் பிறகு வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் நித்திஷ்ரானா இருவரும் இணைந்து சிறிது ரன்களை அடித்தனர்.  அதிரடியாக விளையாடிய வெங்கடேச ஐயர் 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உட்பட 57 ரன்களை குவித்தார். நித்திஷ்ரானா 17 பந்துகளில் 22 ரன்கள் அடித்து வெளியேறினார்.  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரசல் மற்றும் ரிங்கு சிங் இருவரும் ரன்கள் அடிக்க சிரமப்பட கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கரிகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சாஹல் சிறப்பாக வந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

மேலும் படிக்க | IPL 2023: தீபக் சஹாரின் தலையிலேயே போட்ட தல... தோனியின் என்ட்ரியால் எச்சரித்த ஆப்பிள் வாட்ச் - சுவாரஸ்ய சம்பவங்கள்!

மிகவும் எளிமையான இலக்கை எதிர்த்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்தாலும் அதிர்ச்சியுடன் முடிந்தது.  முதல் ஓவரிலேயே 26 ரன்கள் வந்த போதிலும் ஜாஸ் பட்லர் ரன்கள் ஏதும் இன்றி ரன் அவுட் ஆனார்.  கொல்கத்தா அணி பேட்டிங் செய்தபோது ஸ்பின்னருக்கு அதிகமாக கிரிக்கெட்டுகள் விழுந்ததால் முதல் ஓவரிலேயே கேப்டன் நித்திஷ்ரானா வந்து வீசினார், ஆனால் அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் சென்றது.  ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தை இந்த போட்டியிலும் தொடர்ந்தார்.  யார் வந்து வீசினாலும் சிக்ஸர் தான் என்று முடிவு செய்து கொண்டு களமிறங்கியது போல் அனைவரின் பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றினார்.  வெறும் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.  மறுபுறம் கேப்டன் சஞ்சு சாம்சன் 5 சிக்ஸர்கள் இரண்டு பவுண்டர்கள் உட்பட 48 ரன்கள் குவித்தார்.

சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 94 ரன்கள் இருந்தபோது வெற்றிக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.  சிக்ஸர் மூலம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த பந்தில் பவுண்டரி மட்டுமே கிடைத்தது.  இதனால் 98 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவரில் 151 ரன்கள் அடித்து இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.  தற்போது புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க | IPL 2023: பிளே ஆஃப்க்கு போட்டி போடும் 10 அணிகள்! யாருக்கு தான் வாய்ப்பு அதிகம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News