IPL 2023: 'நாங்கள் அதனால் தான் தோற்றோம்' - கேப்டன் தோனி கூலாக சொன்னது என்ன?

IPL 2023 CSK vs RR: ராஜஸ்தான் அணியுடான போட்டியில், கடைசி பந்துவரை சென்று 3 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்த நிலையில், அதுகுறித்து கேப்டன் தோனி கூறிய கருத்துகளை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 13, 2023, 07:37 AM IST
  • ஆட்ட நாயகனாக அஸ்வின் தேர்வானார்.
  • கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.
  • தோனியால் கடைசி பந்தில் பவுண்டரியை தேடித்தர இயலவில்லை.
IPL 2023: 'நாங்கள் அதனால் தான் தோற்றோம்' - கேப்டன் தோனி கூலாக சொன்னது என்ன? title=

IPL 2023 CSK vs RR: நடப்பு ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்று (ஏப். 12) மோதியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கடைசி பந்து வரை விறுவிறுப்பு இருந்தது. கேப்டன் தோனி, ஜடேஜா ஆகியோர் இறுதிநேர அதிரடி இலக்கை நெருங்கினாலும், அவர்களால் போட்டியை வென்றுகொடுக்க முடியவில்லை. 

அற்புத யார்க்கர்கள்

கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளை சந்தீப் சர்மா அற்புதமாக வீசி, சிஎஸ்கேவிடம் இருந்து போட்டியை பிடுங்கிக்கொண்டார் எனலாம். அவரின் துல்லியமான யார்க்கரால், ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. பேட்டிங்கில் 30(22) ரன்களையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

சிஎஸ்கே அணி, தோனி 35(17), ஜடேஜா 25(15) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடக்க வீரர் டேவான் கான்வே 50(38), ராகானே 31(19) ரன்களையும் எடுத்திருந்தனர். போட்டிக்கு பின், அணியின் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி,"பேட்டிங்கின் மத்திய ஓவர்களில் சிறப்பாக விளையாடததால்தான் நாங்கள் போட்டியை இழந்தோம் என்று நினைக்கிறேன், இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் தேவைப்படுகிறது. 

மேலும் படிக்க | CSK vs RR: சொந்த மண்ணிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்

அதிக டாட் பால்கள்

ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சுக்கு அதிக சாதகமாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஆம், அவர்கள் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளனர், எனவே அவர்கள் நன்றாக பந்து வீசினர். அவர்கள் சரியான லெங்த்தில் பந்து வீசினார்கள், ஆனால் அந்த கட்டத்தில் அதிகமான டாட் பால்கள் இருப்பதாக நான் உணர்ந்தேன்.

விக்கெட் மெதுவாக இருந்தால், அது நின்று திரும்புகிறது, என்னால் அதை புரிந்து கொள்ள முடியும், ஆனால் செட் பேட்ஸ்மேன் இருக்கும்போது, ஒரு புதிய பேட்டர் களமிறங்கினால் அது அவ்வளவு கடினம் என்று நான் நினைக்கவில்லை. எனவே, இதற்கான பொறுப்பு பேட்டர்களிடம் இருந்து வர வேண்டும் என கருதுகிறேன்.

200ஆவது போட்டி

மொத்தத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கேப்டனாக 200 ஆட்டங்களில் விளையாடியது, இது பெரிய மைல்கல் அல்ல. அது 199 போட்டியோ அல்லது 200 போட்டியோ அது எப்படி முக்கியம் ஆகும்?. 200 போட்டிகளில் விளையாடுவது பாக்கியம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. ஆனால், அதுகுறித்து நான் குறிப்பாக எதுவும் சொல்லவில்லை" என்றார்.

தோனிக்கு நேற்றைய போட்டி முக்கிய மைல்கல்லை அளித்த போட்டியாகும். நேற்றைய போட்டியின் மூலம், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக 200ஆவது போட்டியை விளையாடினார். ஒரு அணிக்கு 200 போட்டிகளில் கேப்டனாக இருந்தது டி20 வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.  

மேலும் படிக்க | ஐபிஎல்ல விளையாட உடற்தகுதி அவசியம்! சிஎஸ்கே வீரரை கடுமையாக சாடும் சாஸ்திரி! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News