சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியால் கிடைத்த மற்றுமொரு மகுடம்...!

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஆசியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு அணியாக மாறியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 29, 2023, 02:55 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியால் கிடைத்த மற்றுமொரு மகுடம்...! title=

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, உலகில் நடைபெறும் மற்ற கிரிக்கெட் தொடர்களைக் காட்டிலும் மிகவும் பிரபலமானதாக மாறியுள்ளது. 2 மாதங்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழா மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போதைய நிலையில் தொடரானது முதல் பாதியை நிறைவு செய்து, இரண்டாவது பாதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ராஜஸ்தான், லக்னோ, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் 4 இடத்தில் இருக்கின்றன. இந்நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய மகுடம் ஒன்று கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணிகள்! டாப் 10 லிஸ்டில் மிரட்டும் சிஎஸ்கே

அதாவது ஆசியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது. மார்ச் மாதம் டிவிட்டரில் நடத்தப்பட்ட ஆய்வில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆசியாவின் மிகவும் பிரபலமான அணியாக இருக்கிறது. சுமார் 5.12 மில்லியன் நெட்டிசன்கள் சென்னை அணியுடன் ஏதாவதொரு வகையில் தொடர்பு கொண்டிருக்கின்றனர். 2வது இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கால்பந்து அணி இருக்கும் நிலையில், 3வது இடத்தில் விராட் கோலி அங்கம் வகிக்கும் ஆர்சிபி அணியும், 4வது இடத்தில் 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இருக்கின்றன. 

கால்பந்து விளையாட்டில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகிக்கும் அணி தான் கடந்த சில மாதங்களாகவே டிவிட்டரில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ரசிகர்கள் அவருடைய அணியை அதிகம் பின் தொடர்பவர்களாகவும், அந்த அணியின் அப்டேட்டுகளையும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஐபில் தொடங்கியபிறகு தோனியை பற்றியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் அதிகம் தேடவும், விரும்பவும் செய்திருக்கின்றனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புகழ் ஆசியா முழுவதும் பரவி இருப்பதாக அந்த அணியின் ரசிகர்கள் மெச்சிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை அந்த அணியில் சர்வதேச போட்டியில் விளையாடாத மற்றும் போதிய அனுபவம் இல்லாத பவுலர்களே அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்தே சிறப்பாக விளையாடி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது சிஎஸ்கே. தோனியின் சிறப்பான வழிநடத்தலும், திட்டமிடலுமே காரணம் என கிரிக்கெட் வல்லுநர்களே பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைவிட சிறப்பான பவுலிங் யூனிட்டை வைத்திருக்கும் அணியால் கூட சிஎஸ்கே அளவுக்கான வெற்றியையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அந்த அணிகளுடன் சிஎஸ்கே அணியை ஒப்பிட்டு தோனிக்கு புகழ்மாலை சூட்டிக் கொண்டிருக்கின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

மேலும் படிக்க | IPL 2023: இந்த வீரர் எங்களை ஏமாற்றிவிட்டார்.. இனி வாய்ப்பு கொடுக்கமாட்டோம்: ரிக்கி பாண்டிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News