ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணிகள்! டாப் 10 லிஸ்டில் மிரட்டும் சிஎஸ்கே

Highest Team Score in IPL History: பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி 257 ரன்கள் அடித்து மிரட்டியது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 அணிகள் பற்றி தற்போது காணலாம்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Apr 29, 2023, 11:38 AM IST
  • ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 அணிகள் எவை?
  • ஐபில்லில் அதிக ஸ்கோர் பெற்ற டாப் 10 அணிகளின் பட்டியல்.
  • சென்னை அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணிகள்! டாப் 10 லிஸ்டில் மிரட்டும் சிஎஸ்கே title=

Which Team Scored The Most Runs In IPL 2023: ஐபிஎல் என்றாலே அதிரடி தான். ஐபிஎல் மைதானத்தில் தான் பந்துவீச்சாளர்கள் கூட சிக்சர் அடித்து வாணவேடிக்கை காட்டுவார்கள். மற்ற டி-20 போட்டிகளை விட இந்த ஐபிஎல் போட்டி ரசிகர்களுக்கும் குஷியை தரும். எத்தனை சாதனைகள், எத்தனை சர்ச்சைகள், எத்தனை அதிரடி ஆட்டங்கள் என பிரம்மிக்க வைக்கும். அந்த வகையில் நேற்றைய போட்டியில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 120 பந்துகளுக்கு 257 ரன்கள் அடித்து ருத்ர தாண்டவன் ஆடிவிட்டது லக்னோ.

ஐபிஎல் சீசனில் அதிக ஸ்கோர் அடித்த டாப் 10 அணிகள்:
இதுவரை ஐபில்லில் அதிக ஸ்கோர் பெற்ற டாப் 10 அணிகளின் லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம். இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது பெங்களூரு அணி தான். கப் மட்டும் தான் அடிக்க மாட்டோம் ஆனா மத்தபடி ஐபிஎல்லில் நாங்க தான் கில்லி என்பது போல 2013-ம் ஆண்டு பூனே வாரியர்ஸ் அணியுடனான ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ 263 ரன்கள் குவித்தது.  இந்த போட்டியில் கிறிஸ் கேல் 66 பந்துகள்ல் 175 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார்.

மேலும் படிக்க - IPL History: ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் எடுத்த 5 அணிகளின் ரன்கள்

இரண்டாம் இடத்தை நேற்றைய போட்டியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் பெற்றுள்ளது. இந்த அணி பஞ்சாப் கிங்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 257 ரன்கள் குவித்தது. மூன்றாம் இடத்தில் மீண்டும் பெங்களூரு தான் பிடித்துள்ளது. 2016-ம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 248 ரன்கள் குவித்துள்ளது.

சிஎஸ்கே அணியின் ஆதிக்கம்:
நான்காம் இடத்தில் நம்ம பேவரேட் சிஎஸ்கே தான் உள்ளது. சிஎஸ்கே அணி 2010-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 246 ரன்களை அதிரடியாக குவித்தது. ஐந்தாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 245 ரன்களுடன் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 2018-ம் ஆண்டு இந்த லிஸ்டில் கொல்கத்தா இணைந்து கொண்டது.

ஆறாவது இடத்திலும் சிஎஸ்கே தான் உள்ளது. 240 ரன்களை முதல் ஐபிஎல் சீசனிலேயே எடுத்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியது சென்னை அணி. 2008-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் சிஎஸ்கே இந்த ரன்களை குவித்தது. 7-வது இடத்தில் பெங்களூரு அணி மூன்றாவது முறையாக இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. ஒரே விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை குவித்தது பெங்களூரூ. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தான் இந்த ரன்களை பெங்களூரூ அணி எடுத்தது.

மேலும் படிக்க - IPL 2023: ஆர்சிபி சாதனையை முறியடித்த லக்னோ... ஸ்டாய்னிஸ் அதிரடி - பஞ்சாப் போராடி தோல்வி!

எட்டாவது இடத்தில் மீண்டும் சிஎஸ்கே தான் உள்ளது. 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எடுத்து நடப்பு சீசனில் ஏப்ரல் 23-ம் தேதி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடியது சிஎஸ்கே. 9-வது இடத்தில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்து இடம்பெற்றுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடந்த 2021-ம் ஆண்டு இந்த ஸ்கோரை மும்பை அடித்தது.

இந்த லிஸ்டில் 10-வது இடத்தில் பஞ்சாப் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு பெங்களூரூவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 232 ரன்கள் குவித்தது. இந்த டாப் 10 லிஸ்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறையும், பெங்களூரூ 3 முறையும் அதிரடியாக அதிக ரன்கள் குவித்து இடம் பிடித்துள்ளது.

4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி:
சிஎஸ்கே, பெங்களூருவை தவிர லக்னோ, கொல்கத்தா, மும்பை, பஞ்சாப் ஆகிய அணிகளும் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. சென்னை அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த லிஸ்டில் 3 முறை இடம் பிடித்துள்ள பெங்களூரு இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க - IPL 2023: ஜடேஜாவுக்கு முன் தோனி ஏன் பேட்டிங் செய்ய வரவில்லை... இதுதான் காரணமாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News