IPL 2023: விராட் கோலியிடம் மன்னிப்பு? - தெளிவுப்படுத்திய நவீன்-உல்-ஹக்

Naveen-Ul-Haq: விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்பதாக நவீன்-உல்-ஹக் பெயரில் வெளியான ட்வீட் குறித்து அவர் தற்போது விளக்கமளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : May 27, 2023, 09:04 PM IST
  • நாளையுடன் நடப்பு ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ளது.
  • ஆப்கனை சேர்ந்த நவீன்-உல்-ஹக்கின் வயது 23.
  • அவர் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் உள்ளார்.
IPL 2023: விராட் கோலியிடம் மன்னிப்பு? - தெளிவுப்படுத்திய நவீன்-உல்-ஹக் title=

Naveen-Ul-Haq: நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற இருக்கிறது. 10 அணிகள் கடுமையாக போட்டியிட்ட இந்த தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக மோதிக்கொள்ள உள்ளன. 

கோலி - நவீன் சர்ச்சை

குறிப்பாக, இந்த தொடர் மறக்க முடியாத பல தருணங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளது எனலாம். விராட் கோலியின் அடுத்தடுத்த சதங்கள், சுப்மன் கில்லின் மிரட்டலான எழுச்சி, சென்னை மும்பை அணிகளின் ஆதிக்கம் என பலவற்றை கூறினாலும் விராட் கோலி - கம்பீர் - நவீன் சர்ச்சை என்பது இந்த தொடரில் யாராலும் மறக்கவே முடியாது எனலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையில் லக்னோவில் நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி அசத்தலாக வெற்றி பெற்றது. போட்டிக்கு பின் விராட் கோலிக்கும், லக்னோ அணி வீரரான நவீன்-உல்-ஹக் ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் எழுந்தது. தொடர்ந்து விராட் கோலிக்கும், கௌதம் கம்பீருக்கும் இடையிலும் பிரச்னை எழுந்தது. பின்னர் மற்ற வீரர்களின் தலையீட்டில் அப்போது பிரச்னை அதோடு தீர்க்கப்பட்டது. விராட் கோலிக்கும், கௌதம் கம்பீருக்கும் போட்டித்தொகையில் 100 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | IPL 2023: இறுதிப்போட்டியில் குஜராத்... மும்பையின் வெற்றியை பறித்த மோகித் சர்மா!

நவீனின் பதிவு

விராட் கோலியுடனான பிரச்னைக்கு பின், நவீன்-உல்-ஹக் சமூகவலைதளத்தில் தொடர்ந்து கேலிக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து, நவீன் சமூக வலைதளங்களில் இடும் பதிவுகள் கோலி அல்லது கோலிக்கு விளையாடும் போட்டிக்கும் எதும் தொடர்ப்பு இருக்கிறதா என ரசிகர்களால் நுணுக்கமாக ஆராயப்பட்டது எனலாம். 

சர்ச்சைக்குள்ளான ட்விட்டர் கணக்கு

அந்த வகையில், ஐபிஎல் எலிமினேட்டரில் லக்னோ அணி, மும்பை இந்தியன்ஸ் அணியால் தோற்கடிக்கப்பட்ட பிறகு, கோலியுடன் தொடர்பில் இருப்பது போன்று நவீனின் பெயரைக் கொண்ட ஒரு ட்விட்டர் கணக்கு   விரைவாக வைரலானது.

'@naveenulhaq66' என்ற பெயரில் ஒரு ட்விட்டர் "என்னை மன்னிக்கவும் விராட் கோலி சார்" என்று பதிவிட்டது. இது பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், நவீன் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதாவது, அந்த ட்விட்டர் கணக்கு தன்னுடையது அல்ல என்றும், தனக்கு என்று ட்விட்டர் கணக்கே இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இதில் இருந்து எதுவும் மெசேஜ் வந்தால் ரிபோர்ட் செய்யவும் எனவும் விளக்கமளித்துள்ளார். 

Naveen Ul Haq

விளையாட்டின் ஒரு பகுதியாகும்

முன்னதாக, நவீன் தனது அணிக்காக சிறப்பாகச் செயல்படத் தூண்டுவதால், பாடல்களை ரசிப்பதாகக் கூறினார். "மைதானத்தில் உள்ள அனைவரும் அவரது பெயரையோ அல்லது எந்த வீரரின் பெயரையோ உச்சரிப்பது எனக்குப் பிடிக்கும். நான் அதை ரசிக்கிறேன். இது எனது அணிக்காக சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தருகிறது" என்று எலிமினேட்டர் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது நவீன் கூறினார். 23 வயதான அவர், பாராட்டும் விமர்சனமும் கைகோர்த்து வருவதாகவும், ஒரு நிபுணராக ஒருவர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

"வெளியில் இருந்து வரும் சத்தத்தில் நான் கவனம் செலுத்தவில்லை. எனது கிரிக்கெட் மற்றும் எனது சொந்த செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். கூட்டம் கோஷமிடுவது அல்லது இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது. ஒரு நிபுணராக, நீங்கள் இதை உங்கள் முன்னேற்றத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாள் நீங்கள் உங்கள் அணிக்காக உங்களால் முடிந்ததைச் செய்ய மாட்டீர்கள், அப்போதும் இந்த ரசிகர்கள் இப்படி செய்வார்கள். ஆனால் நீங்கள் வெற்றி பெற்றுக்காட்டும்போது, அவர்கள் உங்கள் பெயரை உச்சரிப்பார்கள். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும்"என்று நவீன் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2023 போட்டியில் சென்னை அணியின் வெற்றியின் சீக்ரெட் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News