IPL 2023: ஆர்சிபி அணிக்கு வராத ஆல்ரவுண்டர்..! எப்போது வருவார் என எதிர்பார்க்கும் நிர்வாகம்?

ஆர்சிபி அணி இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத இருக்கும் நிலையில், அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் இன்னும் வந்துசேரவில்லை.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 2, 2023, 03:57 PM IST
IPL 2023: ஆர்சிபி அணிக்கு வராத ஆல்ரவுண்டர்..! எப்போது வருவார் என எதிர்பார்க்கும் நிர்வாகம்? title=

பாப்டூபிளசிஸ் கேப்டன் பொறுப்பு வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியில் வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வெல்லாத அணிகளில் ஆர்சிபி இருப்பதால், இந்த ஆண்டாவது அந்த குறையை போக்க வேண்டும் என்ற இலக்குடன் அந்த அணி களமிறங்க காத்திருக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு ஆர்சிபி கோப்பை வெல்லாமல் இருப்பது பெரும் மனக்குறையாகவே இருந்து வருகிறது. பல வருடங்களாக அவர் அந்த அணிக்கு கேப்டனாக இருந்தபோதும், அவருடன் இணைந்து கெயில் டிவில்லியர்ஸ் பிளேயிங் லெவனில் விளையாடியபோதும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை மட்டும் ஆர்சிபி அணியாமல் நெருங்க முடியவில்லை. 

மேலும் படிக்க | RCB vs MI: மும்பையை வீழ்த்த ஆர்சிபி செய்ய வேண்டிய முக்கிய விஷயம்!

அதனால் அணி கோப்பை வென்றால் மட்டும் போதும் எனக்கு எந்த முக்கியத்துவம் வேண்டாம் என கேப்டன் பொறுப்பைக் கூட கொடுத்துவிட்டு இப்போது பிளேயராக விளையாடிக் கொண்டிருக்கிறார் விராட் கோலி. நிச்சயம் இந்த ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி தான் என அந்த அணியின் ரசிகர்களும் பெரும் நம்பிக்கையில் இருக்கும் நிலையில், தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதற்கு முன்பே அந்த அணிக்கு அடுத்தடுத்த அடிகள் விழுந்து கொண்டே இருக்கிறது. முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் காயத்தில் இருந்து குணமடைந்தால் ஐபிஎல் பிற்பகுதியில் ஆர்சிபி அணியுடன் விளையாட வாய்ப்பு இருப்பதாக தகவல் அனுப்பியுள்ளார்.

அதேபோல் மேக்ஸ்வெல் காயத்தில் இருந்து இப்போது தான் குணமடைந்திருக்கிறார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படியே இறங்கினாலும் வழக்கமான அதிரடி ஆட்டத்தை காண்பிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனென்றால் மேக்ஸ்வெல் இப்போது பார்ம் அவுட்டில் இருக்கிறார். இது ஆர்சிபி அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா இன்னும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணையவில்லை.

இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் அவர், ஏப்ரல் 9 ஆம் தேதிக்குப் பிறகு ஆர்சிபி அணியுடன் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஆர்சிபி அணியின் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் உறுதிபடுத்தியுள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஹசரங்கா 16 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியில் இடம்பிடித்தார். 

மேலும் படிக்க | IPL 2023: ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே விழுந்த அடி..! 2 நட்சத்திர வீரர்கள் சந்தேகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News