உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி (WTC Final) ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஜூன் 7 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தற்போதைய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இந்தியா உலகின் நம்பர் 1 அணியாகவும், ஆஸ்திரேலியா உலகின் நம்பர் 2 அணியாகவும் உள்ளன. இரு அணிகளுமே சரிசம பலத்தில் இருப்பதால், யார் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்திய அணியை பொறுத்த வரையில், நட்சத்திர வீரர்களில் 5 பேர் சிறப்பாக விளையாடினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும் படிக்க | CSK Equalls MI: மும்பை அணியின் 5 முறை ஐபிஎல் பட்டம் சாதனையை சமன் செய்த சிஎஸ்கே!
ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா டீம் இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அவர் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாத்தியமில்லாத வெற்றியை பெற வைத்த ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கபடுகிறது.
சேதேஷ்வர் புஜாரா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்டிங்கின் நங்கூரமாக பார்க்கப்படுபவர் சேட்டேஷ்வர் புஜாரா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாட வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளார். மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய இருக்கும் இவர் மீது தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. சேட்டேஷ்வர் புஜாரா இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43.89 சராசரியில் 7154 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். ஐபிஎல் 2023-ல், விராட் கோலி 2 சதம் மற்றும் 6 அரை சதங்களின் உதவியுடன் 639 ரன்கள் எடுத்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என யூகிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக விராட் கோலி இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48.93 சராசரியில் 8416 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 சதங்கள் அடித்துள்ளார்.
முகமது ஷமி
முகமது ஷமி டீம் இந்தியாவின் மிகவும் ஆபத்தான வேகப்பந்து வீச்சாளர். கடந்த ஒரு வருடத்தில், ஜஸ்பிரித் பும்ரா இல்லாத இடத்தை இந்திய அணியில் நிரப்பிக் கொண்டிருக்கிறார். முகமது ஷமி சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2023-ல் அதிகபட்சமாக 28 விக்கெட்டுகளை வீழ்த்தி ப்ளூ தொப்பியை வென்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் கூட, முகமது ஷமி தனது புயல்வேக தாக்குதலில் ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைப்பார் என எதிர்பார்க்கலாம்.
அஜிங்க்யா ரஹானே
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக அஜிங்க்யா ரஹானே திகழ்வார். 2014, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்தில் டெஸ்ட் விளையாடிய அனுபவம் பெற்றவர். இவரின் ஆட்டத்தைப் பொறுத்தே இந்திய அணியின் ஸ்கோர் இருக்கும் என்பதால் அதற்கேற்ப விளையாடுவார். ரஹானே 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் அடித்து 4931 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் படிக்க | CSK Champion: 5வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்..! தோனி ஆனந்த கண்ணீர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ