விராட் கோலியுடன் U19 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் யார் யார் தெரியுமா?

Virat Kohli: ரவீந்திர ஜடேஜா முதல் மணீஷ் பாண்டே வரை 2008 U19 உலகக் கோப்பையில் விராட் கோலியின் அணியில் விளையாடி உள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jan 23, 2024, 08:44 AM IST
  • U19 உலக கோப்பை அணியில் இருந்த ஜடேஜா.
  • விராட் கோலியின் கீழ் விளையாடி உள்ளார்.
  • தற்போது நட்சத்திர வீரராக இருந்து வருகிறார்.
விராட் கோலியுடன் U19 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் யார் யார் தெரியுமா? title=

Virat Kohli: விராட் கோலியின் இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீரராக இருந்து வருகிறார்.  பல சந்தர்ப்பங்களில் தனி ஆளாக நின்று போட்டியை வெற்றி பெற செய்துள்ளார்.  தோனிக்கு அடுத்து அதிக ரசிகர் பட்டாலங்களை விராட் கோலி வைத்துள்ளார்.  விராட் கோலியின் பயணம் U19 உலக கோப்பையில் இருந்து தொடங்கியது. முதலில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த கோலி, இந்திய U19 கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டார். விராட் கோலியின் தலைமையில் எட்டு வருடங்களுக்கு பிறகு 2008ல் இந்தியா U19 அணியை கோப்பையை வென்றது.  அந்த அணியின் பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் இந்திய அணியிலும் ஆடி உள்ளனர். 

மேலும் படிக்க | Chennai Super Kings: இனி இந்த சிஎஸ்கே வீரர் ஐபிஎல்லில் விளையாடவே முடியாது!

இந்திய U19 அணியின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான வீரராக இருந்த கோலி, அதே போலவே இந்திய அணிக்கு இருந்து வருகிறீர்.  விராட் இந்தியாவின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் மற்றும் பல பேட்டிங் சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை பதிவு செய்துள்ளார் கோலி. மேலும் சச்சினின் பல சாதனைகளை சிறு வயதிலேயே தகர்த்துள்ளார். 2008 உலகக் கோப்பையை வென்ற இந்திய U19 அணியில் இருந்த வீரர்கள் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பார்ப்போம். ரவீந்திர ஜடேஜா, அபினவ் முகுந்த், மணீஷ் பாண்டே, சௌரப் திவாரி, சித்தார்த் கவுல் ஆகியோர் விராட் கோலியின் அணியில் இடம் பெற்று இருந்தனர்.

ரவீந்திர ஜடேஜா

இந்திய அணியில் அறிமுகமாகும் முன் விராட் கோலியுடன் U19 உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார் ஜடேஜா. U19 உலக கோப்பை முடிந்த ஒரு ஆண்டிற்கு பிறகு சர்வதேச அணியில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தாலும், 2012ல் ஜடேஜா தனது இடத்தை பிடித்து கொண்டார்.  ஜடேஜா இப்போது மூன்று வடிவங்களிலும் இந்தியாவின் முதன்மை ஆல்-ரவுண்டராக உள்ளார் மற்றும் பேட்டிங், பவுலிங்கில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

அபினவ் முகுந்த்

2011ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் போது அபினவ் முகுந்த் இந்திய அணியில் அறிமுகமானார். பின்பு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார், ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அபினவ் முகுந்த் 2017ல் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.  ஆனால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பின்பு, 2020 முதல் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார்.

மணீஷ் பாண்டே

மணீஷ் பாண்டே 2014ல் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பிடித்தார்.  கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் மணீஷ் பாண்டே இந்திய அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தார். 2021 முதல் தேசிய அணியில் இருந்து வெளியேறினார். மணீஷ் பாண்டே இதுவரை 29 ஒருநாள் மற்றும் 39 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சௌரப் திவாரி

சௌரப் திவாரி உலகக் கோப்பை முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகமானார். இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் சௌரப் திவாரி ஜார்கண்ட் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலியுடன் ஆடி உள்ளார்.

சித்தார்த் கவுல்

U19 உலகக் கோப்பை முடிந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு சித்தார்த் கவுல் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பெற்றார்.  2017 டிசம்பரில் இலங்கைக்கு எதிரான ODI தொடரில் இடம் பெற்றாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.  பின்பு 2018ல் UK சுற்றுப்பயணத்தின் போது தனது T20 மற்றும் ODI அறிமுகங்களை செய்தார். ஐபிஎல்லில் ஆர்சிபியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மேலும் படிக்க | ராமர் கோவில் திறப்பு விழா... பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News