ராமர் கோவில் திறப்பு விழா... பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?

Ram Temple Pran Praththista: அயோத்தி ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டையில் கலந்துகொண்ட பிரபல விளையாட்டு வீரர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 22, 2024, 01:17 PM IST
  • ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • பிரதமர் மோடி முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • இதில் பல பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
ராமர் கோவில் திறப்பு விழா... பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள் யார் யார்? title=

Ram Temple Pran Praththista: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில், பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி முன்னிலையில், ராமர் சிலைக்கு பிராஷ் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமரின் கண்களில் இருந்த துணிகள் அகற்றப்பட்டது. 

குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டது

பால ராமரை பிரதமர் மோடி தாமரை மலர்களை தூவி பூஜித்தார். அவருடன் உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் கோகிலா பென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் அர்ச்சகர்கள் பலரும் இருந்தனர். அவர்கள் பிரான் பிரதிஷ்டை செய்த நேரடி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், குழந்தை ராமர் சிலை திறப்பின் போது கோயில் வளாகத்தில் இருந்தோரின் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழா என்பது அயோத்தியில் மட்டுமல்ல நாடு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேரடி ஒளிபரப்பு மூலம் பலரும் குழந்தை ராமர் பிரான் பிரதிஷ்டை நிகழ்வை நேரலையில் கண்டுகளித்தனர். மேலும், அயோத்தி ராமர் கோவிலில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | PINEWZ: ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன் புதிய செயலியை அறிமுகம் செய்தார் டாக்டர். சுபாஷ் சந்திரா

பங்கேற்றவர்கள் யார்?

இந்நிலையில், பல பிரபலங்களுக்கு இன்று அயோத்தி ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக, பல விளையாட்டு வீரர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழாவில் பல விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், மிதாலி ராஜ், அனில் கும்ப்ளே, ரவிந்திர ஜடேஜா, மிதாலி ராஜ், பேட்மிண்டன் வீராங்கனை சானியா நேவால் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். எம்எஸ் தோனி, விராட் கோலி, ஹர்மன்பிரீத் கவுர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், சில காரணங்களுக்காக பலரும் இன்று பங்கேற்கவில்லை. 

தெய்வீகமான தருணம்

விழாவில் பங்கேற்ற அனில் கும்ப்ளே ஊடகம் ஒன்றில் அங்கு பேசுகையில்,"இது ஒரு அற்புதமான தருணம். மிகவும் தெய்வீகமான தருணம். இதில் ஒரு அங்கமாக இருப்பது பாக்கியம். இது மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ராம் லல்லாவிடம் ஆசி பெற காத்திருக்கிறேன்" என்றார். சாய்னா நேவால் கூறுகையில்,"இது நமக்கு ஒரு பெரிய நாள். 'பிரான் பிரதிஷ்டை' விழாவில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் சொல்ல முடியாது. எதிர்காலத்தில் மக்கள் இங்கு வந்து வழிபாடு செய்ய வேண்டும் என விரும்புகிறேன்" என்றார். 

நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அலியா பட், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல், கத்திரினா கைஃப், ஆயுஷ்மான் குரானா, சிரஞ்சீவி, ராம்சரண், தனுஷ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி நிதா அம்பானி ஆகியோரும் பங்கேற்றனர். 

மேலும் படிக்க | ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அத்வானி வரவில்லை... காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News