6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப்!

IPL 2019 தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

Last Updated : May 5, 2019, 07:38 PM IST
6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப்! title=

IPL 2019 தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

IPL 2019 தொடரின் 55-வது லீக் ஆட்டம் இன்று மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினர்.

துவக்க வீரராக களமிறங்கிய டூப்ளசிஸ் 96(55) ரன்கள் குவித்து வெளியேற இவருக்கு துணையாக சுரேஷ் ரெய்னா 53(38) ரன்கள் குவித்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் சாம் கர்ரான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களா களமிறங்கிய லோகேஷ் ராகுல் 71(36) மற்றும் கிறிஸ் கெயில் 28(28) ரன்கள் குவித்து அணிக்கு அதிரடி துவக்கம் அளித்தனர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஆட்டத்தின் 18.ஓவர் முடிந்த நிலையில் பஞ்சாப் அணி 4 விக்கெட்கள் மட்டுமே இழந்து 173 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 12 புள்ளிகள் குவித்த போதிலும்., -0.251 ரன்ரேட் கொண்டமையால் ப்ளா ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 

இதனையடுத்து மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், இல்லையேல் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News