LIVE IPL 2020 SRH vs KXIP: KXIP அணிக்கு எதிரான ஆட்டத்தில் SRH 201 ரன்கள் குவித்துள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 8, 2020, 09:42 PM IST
  • இன்றைய போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 61 டி-20 போட்டிகள் நடந்துள்ளன..
  • சன்ரைசர்ஸ் - பஞ்சாப் இடையே இதுவரை 14 போட்டிகள் நடந்துள்ளன. ஹைதராபாத் 10, பஞ்சாப் 4 போட்டிகளில் வென்றுள்ளது.
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது.
LIVE IPL 2020 SRH vs KXIP: KXIP அணிக்கு எதிரான ஆட்டத்தில் SRH 201 ரன்கள் குவித்துள்ளது. title=

சமீபத்திய ரன்கள் குறித்து நேரடி தகவல்.. CLICK செய்யவும்.


9:20 PM 10/8/2020
இன்றைய IPL 2020 லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற 20 ஓவரில் 202 ரன்கள் தேவை.

 

 


7:13 PM 10/8/2020
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளில் விளையாடப்போகும் 11 வீரர்களின் விவரங்கள்.

 

 

 


7:05 PM 10/8/2020
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது

 

 


IPL 2020 Live Score Updates SRH vs KXIP: இன்றைய இந்தியன் பிரீமியர் லீக் 2020 (Indian Premier League) தொடரின் 22 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இரு அணிகளும் தனது முந்தைய போட்டிகளில் தோல்வியடைந்துள்ளன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றியை தவறவிட்டு ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஹாட்ரிக் தோல்வியின் வரிசையை உடைத்து, புள்ளி அட்டவணையில் தனது நிலையை மேம்படுத்த வேண்டும். அதற்காக பஞ்சாப் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம். அதே நேரத்தில், சன்ரைசர்ஸ் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப்பை வீழ்த்தி அட்டவணையில் முதல் 4 அணிகள் பட்டியலில் இடம் பிடிக்கும்.

புள்ளிகள் அட்டவணையில் தற்போது சன்ரைசர்ஸ் ஆறாவது இடத்திலும், பஞ்சாப் கடைசி இடத்திலும் உள்ளன. இருவருக்கும் இடையே இதுவரை 14 போட்டிகள் நடந்துள்ளன. இவர்களில் ஹைதராபாத் 10, பஞ்சாப் 4 போட்டிகளில் வென்றுள்ளது. இந்த 14 போட்டிகளில் 9 போட்டிகளில் ஹைதராபாத் முதலில் பேட் செய்து 7 போட்டிகளில் வென்றுள்ளது.

ALSO READ | IPL 2020, RCB vs DC: பெங்களூரு பேட்ஸ்மேன் ஆரோன் ஃபின்சை எச்சரித்த அஸ்வின்..!

அதே நேரத்தில், இரண்டாவதாக 5 போட்டிகளில் பேட்டிங் செய்து, 3 போட்டிகளில் ஹைதராபாத் (SRH) அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, இருவருக்கும் இடையே 2 போட்டிகள் நடத்தப்பட்டன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்தனர். 

இன்றைய போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 61 டி-20 போட்டிகள் நடந்துள்ளன.

இவற்றில், முதலில் பேட்டிங் செய்த அணி 34 முறை வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், 26 முறை பந்து வீசிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில், முதல் இன்னிங்சில் அணியின் சராசரி ஸ்கோர் 144 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் அணியின் சராசரி ஸ்கோர் 122 ரன்கள் ஆகும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News