IND vs AUS Final : உலகக்கோப்பை இறுதிப்போட்டி... ஆஸ்திரேலியா சாம்பியன்

IND vs AUS Final: 13ஆவது உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

Written by - Sudharsan G | Last Updated : Nov 19, 2023, 09:40 PM IST
    இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் உலகக் கோப்பை இறுதிப்போட்டி குறித்து அனைத்து உடனடி தகவல்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
Live Blog

IND vs AUS World Cup Final 2023:​ நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. நடப்பு தொடரில் இந்தியா தொடர்ந்து 10 போட்டிகளில் வென்றும், ஆஸ்திரேலியா தொடர்ந்து 8 போட்டிகளில் வென்றும் இறுதிப்போட்டியை எட்டியுள்ளன. இன்றைய போட்டியோடு இதில் ஒரு அணியின் வெற்றி பயணம் மட்டுமின்றி உலகக் கோப்பை கனவும் தகர்ந்துவிடும்.

இந்திய அணி 1983 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் கோப்பை வென்ற நிலையில் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 1987, 1999, 2003, 2007, 2015 என ஐந்து முறை சாம்பியனாகி தனது 6ஆவது கோப்பையை நோக்கி இன்று விளையாடுகிறது. சுமார் 45 நாள்களுக்கு மேல் நடந்த இந்த திருவிழாவில் வாகைசூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் அனல் பறக்கும் நிகழ்வுகளுக்கு பஞ்சமே இருக்காது. மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கிய போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி குறித்த மேலும் தகவல்களுக்கு இந்த செய்திகளை கிளிக் செய்யவும்...

இந்தியாவுக்கு 40% சான்ஸ்... ஆனால் ஆஸ்திரேலியாவுக்குதான் கப்பு - காரணம் என்ன?

இறுதிப்போட்டியில் பிரதமர் மோடி, தோனி, விமான சாகசம் - நிறைவு விழா ஏற்பாடுகள் என்னென்ன?

ஆஸ்திரேலியானா அஸ்வின் தான்... பைனலில் இந்த வீரருக்கு ஆப்பு - என்ன காரணம்?

இந்தியாவின் வீக்னஸ் இதுதான்... அந்த இடத்தில் அடிங்க - ஆஸ்திரேலியாவுக்கு மூத்த வீரர்கள் டிப்ஸ்!

IND vs AUS Final: உலகக் கோப்பையில் யார் கெத்து...? புள்ளிவிவரங்கள் இதோ!
 

19 November, 2023

  • 21:19 PM

    ஆஸ்திரேலியா சாம்பியன்; இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக மகுடம்

    இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியனானது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

     

  • 20:22 PM

    3 ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கும் முகமது சிராஜ்

    உலக கோப்பை இறுதிப்போட்டியில் 30 ஓவர்கள் இந்திய அணி வீசியிருக்கும் நிலையில், முகமது சிராஜ் 3 ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கிறார்.

  • 19:50 PM

    ஆட்டத்தில் திருப்புமுனை

    பும்ரா பந்துவீச்சில் லபுசேன் எல்பிடபள்யூ ஆனார். அதனை நடுவர் நிராகரிக்க, இந்திய அணியின் ரிவ்யூவில் பந்து ஸ்டம்பை தாக்கியது தெரிந்தது. இருப்பினும் அது அம்பயர்ஸ் கால் என்பதால் அவுட்டில் இருந்து தப்பினார் லபுசேன். இந்த விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக மாறியது.

  • 19:41 PM

    ஸ்ரேயாஸ் சூப்பர் பீல்டிங்

    குல்தீப் ஓவரில் பவுண்டரிக்கு செல்ல இருந்த பந்தை லாவகமாக தடுத்து 2 ரன்களை சேமித்து கொடுத்தார் ஸ்ரேயாஸ் அய்யர்

  • 19:30 PM

    ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு 

    இந்திய அணிக்கு எதிரான உலக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு 62% வெற்றி வாய்ப்பு 

  • 19:25 PM

    கே.எல்.ராகுல் சாதனை

    ஒரு  உலக கோப்பை வரலாற்றில் அதிகம் பேரை ஆட்டமிழக்க செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் கே.எல்.ராகுல்

  • 19:05 PM

    ஸ்மித் அவுட் இல்லை

    பும்ரா பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் அவுட்டான ஸ்மித். ரிப்ளேவில் அவுட் இல்லை என தெரியவந்தது. ரிவ்யூ எடுத்திருந்தால் அவுட்டில் இருந்து தப்பியிருக்கலாம்

  • 18:53 PM

    3வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா

    உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3வது விக்கெட்டை இழந்தது. பும்ரா பந்துவீச்சில் 4 ரன்களுக்கு எல்பிடபள்யூ ஆனார். 

  • 18:42 PM

    மிட்செல் மார்ஷ் அவுட்

    பும்ரா ஓவரில் மிட்செல் மார்ஷ் அவுட். 2வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா

  • 18:34 PM

    முகமது ஷமி முதலிடம்

    ஐசிசி உலக கோப்பை 2023 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முகமது ஷமி முதலிடம். 24 விக்கெட்டுகளை எடுத்து ஆடம் ஜாம்பாவை பின்னுக்கு தள்ளினார்

  • 18:33 PM

    முகமது ஷமி முதல் சவிக்கெட்

    முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். டேவிட் வார்னர் சிலிப்பில் நின்ற விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

  • 18:32 PM

    பும்ரா ஓவரில் அதிரடி

    ஜஸ்பிரித் பும்ரா முதல் ஓவரில் 15 ரன்களை அடித்தது ஆஸ்திரேலியா

  • 18:20 PM

    கேட்ச் மிஸ் செய்த விராட் கோலி

    உலக கோப்பை இறுதிப் போட்டியில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் கேட்சை முதல் பந்தில் தவறவிட்டார் விராட் கோலி

  • 17:57 PM

    அகமதாபாத்தில் பிரதமர் மோடி

    உலகக்கோப்பை இறுதி போட்டியை காண நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு வந்த பிரதமர்.

  • 17:43 PM

    240 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்

    உலக கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 

  • 17:22 PM

    9வது விக்கெட்டை இழந்த இந்திய அணி

    சூர்யகுமார் 18 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி 227 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருக்கிறது

  • 17:11 PM

    7வது விக்கெட்டை இழந்தது இந்தியா

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 7வது விக்கெட்டை இழந்தது. சிக்சர் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார் முகமது ஷமி

  • 17:09 PM

    கே.எல்.ராகுல் அவுட்

    உலக கோப்பை இறுதிப்போட்டியில் 6வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி. 66 ரன்களில் கே.எல்.ராகுல் அவுட்

  • 16:49 PM

    ஷாருக்கான் வருகை

    உலக கோப்பை இறுதிப் போட்டியை நேரில் கண்டுகளிக்க வருகை தந்துள்ளார் ஷாரூக்கான்

  • 16:48 PM

    5வது விக்கெட்டை இழந்த இந்தியா

    உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5வது விக்கெட்டை இழந்தது. 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் ரவீந்திர ஜடேஜா

  • 16:06 PM

    கே.எல். ராகுல் அரைசதம்

    நிதானமாக ஆடி 86 பந்துகளில் அபாரமான அரைசதத்தை அடித்தார் கே.எல். ராகுல்.

  • 16:04 PM

    விராட் கோலி அவுட்

    விராட் கோலி 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனதால், இந்திய அணி தற்போது இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது.  

  • 15:34 PM

    விராட் கோலி அரைசதம்

    பரபரப்பான இறுதிப்போட்டியில் விராட் கோலி சற்றும் அசராமல் ஆடி அரைசதம் அடித்து இந்திய அணிக்கு வலுவேற்றியுள்ளார்.

  • 15:14 PM

    விராட் கோலி மற்றொரு சாதனை

    2023 ஆம் ஆண்டில் விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1500 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.

  • 14:53 PM

    100 ரன்களை எட்டியது இந்தியா

    16வது ஓவர் முடிவில்

    இந்தியா-101/3
    விராட் கோலி-34
    கே.எல்.ராகுல்-10
    எக்ஸ்ட்ராஸ்-2

  • 14:49 PM

    11வது ஓவர் முடிவில்

    இந்தியா-82/3

    விராட் கோலி-24
    கே.எல்.ராகுல்-1
    எக்ஸ்ட்ராஸ்-2

  • 14:47 PM

    சோகத்தில் இந்திய ரசிகர்கள்

    ஸ்ரேயஸ் ஐயர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மைதானத்தில் மையான அமைதி!!

  • 14:46 PM

    பத்தாவது ஓவர் முடிவில்

    இந்தியா-80/2

    விராட் கோலி-23

    ஸ்ரேயஸ் ஐயர்-4

    எக்ஸ்ட்ராஸ்-2

  • 14:41 PM

    இந்தியாவிற்கு இரண்டாவது அடி

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 47 ரன்கள் எடுத்து அட்டம் இழந்தார். மேக்ஸ்வெல் போட்ட பந்தை அடித்த ரோகித் ஷர்மா ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

  • 14:37 PM

    ஒன்பதாவது ஓவர் முடிவில்

    இந்தியா-66/1
    ரோகித் ஷர்மா-37
    விராட் கோலி-23
    எக்ஸ்ட்ராஸ்-2

  • 14:34 PM

    எட்டாவது ஓவர் முடிவில்

    இந்தியா-61
    ரோகித் ஷர்மா-35
    விராட் கோலி-21
    எக்ஸ்ட்ராஸ்-1

  • 14:30 PM

    ஏழாவது ஓவர் முடிவில்

    இந்தியா-54
    ரோகித் ஷர்மா-33
    விராட் கோலி-16
    எக்ஸ்ட்ராஸ்-1

  • 14:25 PM

    ஆறாவது ஓவர் முடிவில்

    இந்தியா-40
    ரோகித் ஷர்மா-32
    விராட் கோலி-3
    எக்ஸ்ட்ராஸ்-1

  • 14:22 PM

    ஐந்தாவது ஓவர் முடிவில்

    இந்தியா- 37/1
    ரோகித் ஷர்மா-31
    விராட் கோலி-1
    எக்ஸ்ட்ராஸ்-1

  • 14:19 PM

    சுப்மன் கில் அவுட்

    ஸ்டார்க் போட்ட பந்தை தூக்கி அடித்த சுப்மன் கில் ஜாம்பாவிற்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

  • 14:14 PM

    நான்காவது ஓவர் முடிவில்

    இந்தியா-30
    ரோகித் ஷர்மா-25
    சுப்மன் கில்-4
    எக்ஸ்ட்ராஸ்-1

  • 14:09 PM

    மூன்றாவது ஓவர் முடிவில்:

    இந்தியா-18
    ரோகித் ஷர்மா-14
    சுப்மன் கில்-3

     

  • 14:05 PM

    இரண்டாவது ஓவர் முடிவில்
    இந்தியா-13
    ரோகித் ஷர்மா-13
    சுப்மன் கில்-0

  • 13:58 PM

    இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி முதல் ஓவரின் முடிவில் இந்திய அணி 3 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் ஷர்மா-3, சுப்மன் கில் இன்னும் ரன் எதுவும் எடுக்கவில்லை.

  • 13:53 PM

    தேசிய கீதங்களுடன் துவங்கியது போட்டி

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் பாடப்பட்டு ஆட்டம் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

  • 13:47 PM

    பிட்ச் ரிப்போர்ட்: வயிற்றில் புளியை கரைத்தார் தினேஷ் கார்த்திக்

    இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது ஹை ஸ்கோரிங் போட்டியாக இருக்காது என்றும் ஆடுகளத்தை ஆராய்ந்த கார்த்திக் தெரிவித்துள்ளார். 

  • 13:34 PM

    IND vs AUS LIVE: இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

    ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ்(w), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

  • 13:26 PM

    இன்று விளையாடுகிறாரா அஸ்வின்?

    சிராஜுக்குப் பதிலாக அஸ்வின் இன்று விளையாடக்கூடும் என கூறப்படுகின்றது. அவர் ஆடுகளத்தைப் பார்வையிட்டார். ப்ளேயிங் லெவன் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் வரும். 

  • 13:19 PM

    டாஸ் வென்றது ஆஸ்திரேலிய அணி

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான டாஸை ஆஸ்திரேலிய அணி வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. 

  • 13:08 PM

    இன்னும் சில நிமிசங்களில் டாஸ்!!

    இன்னும் சிறிது நேரத்தில் டாஸ் போடப்படும். அனைத்து போட்டிகளையும் போலவே இன்று நடக்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் டாஸ் வெல்வதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. 

  • 12:43 PM

    IND vs AUS Final 2023 Live Updates: எவ்வளவு பரிசுத் தொகை?

    இன்றைய இறுதிப்போட்டியில் வென்று உலகக் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.33.18 கோடி வழங்கப்படும். 

    இன்றைய இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.16.59 கோடி வழங்கப்படும். 

  • 12:08 PM

    IND vs AUS Final 2023 Live Updates: மற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை?

    - ஒரு லீக் போட்டியை வெல்லும் அணிக்கு ரூ.33.17 லட்சம் கிடைக்கும். 

    - அரையிறுதிக்கு தகுதிபெறதா 6 அணிகளுக்கு (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து) மொத்தமாக ரூ.82.94 லட்சம் வழங்கப்படும். இதில் 6 பங்கு என்பதை நினைவில் கொள்ளவும். 

    - அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணிகளுக்கு (நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா) தலா ரூ.6.63 கோடி வழங்கப்படும்.

  • 11:35 AM

    IND vs AUS Final Live 2023: அகமதாபாத்தில் இந்திய நீல பெருங்கடல்!

  • 11:31 AM

    IND vs AUS Final Live Updates: மைதானத்தில் குவியும் ரசிகர்கள்

    நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டியை காண இந்திய ரசிகர்கள் அலைகடலென குவிந்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

Trending News