40 வயசாச்சு! வேகம் குறைஞ்சிடுச்சு! விராட் கோஹ்லியை விமர்சிக்கும் மஞ்ச்ரேக்கர்

Virat Kohli And pace off: விராட் கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறும் மஞ்ச்ரேக்கர், பந்துவீச்சாளர்கள் வேகத்தை எடுக்கும்போது, அவர் முன்னேற முடியாமல் திணறுகிறார் என்று சுட்டிக்காட்டுகிறார்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 21, 2023, 04:35 PM IST
  • விராட் கோலிக்கு அட்வைஸ் சொல்லும் சஞ்சய் மஞ்ரேக்கர்
  • ஜெயிச்சாச்சு! ஆனா பாத்து விளையாடுப்பா!
  • 40 வயசாச்சு! கவனம் தேவை
40 வயசாச்சு! வேகம் குறைஞ்சிடுச்சு! விராட் கோஹ்லியை விமர்சிக்கும் மஞ்ச்ரேக்கர் title=

ஐபிஎல் 2023 தொடரில், மொஹாலியில் நடந்த 27வது போட்டியில் ஆர்சிபி அணி, பிபிகேஎஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் அணி, 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் ஏழாவது இடத்தில் உள்ளது.

இந்த வெற்றியின் மூலம், கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாப்பிடம் பெற்றுவந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது பெங்களூரு அணி என்பது குறிப்பிடத்தக்கது. இடுப்பு காயம் காரணமாக பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஒரு இம்பாக்ட் பிளேயராக மட்டுமே இடம்பெற்றதால், நீண்ட காலத்திற்குப் பிறகு விராட் கோலி அணிக்கு தலைமை தாங்கினார்.

முதலில் களமிறங்கிய விராட் - டூ பிளேசிஸ் ஜோடி, 16 ஓவர்களில் 137 ரன்களை எடுத்தது. கோலி 59 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் இல்லாத பஞ்சாப் 18.2 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில், விராட் கோஹ்லி 47 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதைப் பற்றி பேசிய முன்னாள் இந்திய பேட்டர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "பெங்களூரு அணி நாங்கள் எதிர்பார்த்தபடி ஸ்கோர் எடுக்கவில்லை. அவர்கள் தொடங்கிய தொடக்கத்தையே இறுதி வரை நீட்டித்திருந்தால், இன்னும் 25 ரன்கள் சேர்த்திருக்கலாம்" எறு தெரிவித்தார்.

மேலும் படிக்க | அர்ஜுன் டெண்டுல்கருக்கு பயிற்சி போறாது! பாகிஸ்தான் கிரிக்கெட்டரின் ‘ஃப்ரீ’ அட்வைஸ்

நல்ல தொடக்கத்திற்குப் பிறகு கோஹ்லி மெதுவாகச் சென்றது குறித்து பேசிய மஞ்ச்ரேகர், "விராட் கோஹ்லி இப்படி செயல்படுவதை சிறிது காலமாகப் பார்க்க முடிகிறது. பந்துவீச்சாளர்கள் வேகத்தை எடுக்கும்போது, அவர் முன்னேற முடியாமல் திணறுகிறார். 40 வயதை எட்டியவுடன், அவர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது வேகம் குறைகிறது, அதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

கோஹ்லி-ஃபாஃப் இருவரும் பவர்பிளேயில் 59 ரன்கள் சேர்த்தனர், ஆனால் கள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் வேகம் குறைந்தது. கோஹ்லி மிடில் ஓவர்களில் சுதந்திரமாக செயல்படத் தவறினார், இது அவருக்கு சில காலமாக ஒரு பிரச்சினையாக இருந்தது. கோஹ்லி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார், ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசினார், ஆனால் பஞ்சாப் ஸ்பின்னர்களுக்கு எதிராக 21 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுக்க ஒன்பது டாட் பந்துகளை எதிர்கொண்டார்.

கோஹ்லி தனது மிடில் ஓவர் பிரச்சினையை தீர்த்து, வேகத்திலும் சுழலிலும் சமமாக ஆதிக்கம் செலுத்துவார் என RCB அணி நம்புகிறது.

மேலும் படிக்க | IPL 2023: ’சேஸிங் மட்டும் எங்க கிட்ட மறந்துடுங்க’ ராஜபாட்டை நடத்தும் கேஎல் ராகுல் டீம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News