தோனி ஓய்வு எப்போது? 4 மாதம் டைம் சொன்ன தல - எதுக்கு தெரியுமா?

Dhoni retirement Exclusive Update : எம்எஸ் தோனி நடப்பு ஐபிஎல் 2024 தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியான அறிவிப்பு எதனையும் அவர் வெளியிடவில்லை. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் முக்கிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2024, 05:46 PM IST
  • ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு
  • இன்னும் 4 மாதங்களில் வெளியாகும் முடிவு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் கொடுத்த அப்டேட்
தோனி ஓய்வு எப்போது? 4 மாதம் டைம் சொன்ன தல - எதுக்கு தெரியுமா? title=

இந்திய அணியின் கேப்டனாக இருந்து சர்வதேச அளவில் பல பெருமைகளையும், சாதனைகளையும் பெற்றுக் கொடுத்த எம்எஸ் தோனி, இப்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், ஐபிஎல் 2024ல் சத்தமில்லாமல் தன்னுடைய கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு பிளேயராக மட்டுமே விளையாடினார். மற்ற அணிகளில் கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபோதும், தோனி கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்து எந்த சலசலப்பும் எழவில்லை. இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவரே வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் 2024 தொடர் தொங்குவதற்கு முன்னர் கேப்டன்களுக்கான போட்டோஷூட் நடந்தபோது மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் என்று அதிகாரப்பூர்வமாக தெரிந்தது.

மேலும் படிக்க | சன்ரைசர்ஸ் அபிஷேக் சர்மாவின் தங்கச்சிக்கு குஜராத் கேப்டன் மீது கிரஷ்ஷாம்!

அதுவரை எந்த கிசுகிசு தகவலும் வெளியாகவில்லை. ஏனென்றால் தோனியின் கேப்டன் பொறுப்பு அனைவருக்கும் தெரியும் என்பதால், அவருடைய கேப்டன்சி மீது யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் என்ற மகுடத்தை சூட வைத்துவிட்டு, இம்முறை அந்த பொறுப்பில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார். இது ஒரு நல்ல தலைவனுக்கான அறிகுறியாக எல்லோராலும் பாராட்டப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் 42 வயதிலும் ஐபிஎல் போட்டியில் சிறப்பாகவே விளையாடினார். ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 6 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்றபோது 110 மீட்டர் சிக்சர் பறக்கவிட்டு மைதானத்தில் இருந்தவர்களின், குறிப்பாக ஆர்சிபி ரிசகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வரவைத்துவிட்டார் எம்எஸ் தோனி.

இருப்பினும் இந்த தொடரை அவரால் வெற்றிகரமாக முடிக்கமுடியவில்லை. அதனால் ஓய்வு அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. அப்படியான அறிவிப்பு ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்த இரண்டு நாட்கள் ஆன பிறகும் வெளியாகவில்லை. இதனால் ஐபிஎல் 2025 தொடரிலும் தோனி விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த சூழலில் தான் தோனியின் ஓய்வு குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் இதுவரை சிஎஸ்கேவில் உள்ள யாரிடமும் ஓய்வு குறித்து எதுவும் பேசவில்லையாம். 

சிஎஸ்கேவின் உரிமையாளர் சீனிவாசனிடம் தன்னுடைய ஓய்வு குறித்து சில மாதங்களுக்கு முன்பே பேசிய தோனி, ஐபிஎல் தொடரின் இடையிலும் தன்னுடைய நிலை குறித்து தெரிவித்துவிட்டாராம். ஆனால் அவர் ஓய்வு பெற வேண்டாம் என சிஎஸ்கே தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறதாம். இருப்பினும் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனி, ஐபிஎல் தொடரின்போது அந்தப் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவாறே விளையாடி இருக்கிறார். ஐபிஎல் முடிந்தவுடன் உடனடியாக ராஞ்சி கிளம்பிச் சென்றுவிட்ட அவர், அங்கு முழங்கால் வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறாராம். அதனுடைய ரிசல்ட் இன்னும் நான்கு மாதத்தில் தெரியவரும் என்பதால், அதன்பிறகு அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்க இருக்கிறாராம். இதுதான் தோனியின் ஓய்வு குறித்த லேட்டஸ்ட் அப்டேட். 

மேலும் படிக்க | Rohit Sharma : ’தனியுரிமையை பாதிக்கிறது’ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது ரோகித் சர்மா அதிருப்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News