சன்ரைசர்ஸ் அபிஷேக் சர்மாவின் தங்கச்சிக்கு குஜராத் கேப்டன் மீது கிரஷ்ஷாம்!

Abhishek Sharma sister Komal Sharma crush : சன்ரைசர்ஸ் அணியின் இளம் வீரரும், ஐபிஎல் 2024ல் அதிரடியாக ஆடி கலக்கிக் கொண்டிருப்பவருமான அபிஷேக் சர்மாவின் தங்கச்சிக்கு குஜராத் கேப்டன் சுப்மன் கில் தான் கிரஷ்ஷாம். இதனை அவரே தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2024, 05:23 PM IST
  • அபிஷேக் சர்மாவின் தங்கை கோமல் சர்மா
  • அவருக்கு மிகவும் பிடித்தவர் யார் தெரியுமா?
  • எக்ஸ் பக்கத்தில் அவரே புகைப்படம் வெளியிட்டுள்ளார்
சன்ரைசர்ஸ் அபிஷேக் சர்மாவின் தங்கச்சிக்கு குஜராத் கேப்டன் மீது கிரஷ்ஷாம்! title=

ஐபிஎல் 2024 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிரடியில் வெளுத்தும் வாங்கிக் கொண்டிருக்கும் அவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இந்த ஐபிஎல் 2024ல் மட்டும் இதுவரை 41 சிக்சர்கள் விளாசி, அதிக சிக்சர்கள் விளாசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேபட்ன் விராட் கோலி 37 சிக்சர்களுடன் இருக்கிறார். அபிஷேக் சர்மாவின் ஸ்டைக் ரேட் 209 ஆக இருக்கிறது. ஐபிஎல் 2024 தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் இந்திய வீரர்களில் அதிக ஸ்டைக் ரேட் கொண்ட பிளேயராகவும் இருக்கிறார். இவருக்கும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கும் நல்ல நட்பு இருக்கிறது.

மேலும் படிக்க | RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மை

குறிப்பாக அபிஷேக் சர்மாவின் குடும்பத்துக்கு சுப்மன் கில் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். மே 16 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற இருந்த போட்டியை பார்க்க அபிஷேக் சர்மாவின் அம்மா, தங்கை கோமல் சர்மா உள்ளிட்டோர் வந்திருந்தனர். துருதிஷ்டவசமாக அப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அதில் ஒரு நல்ல விஷயமாக சன்ரைசர்ஸ் அணி தங்களுடைய பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்ட பிறகு இரு அணி வீரர்கள் வழக்கம்போல் மைதானத்தில் அமர்ந்து ஜாலியாக உரையாடினர். அப்போது அபிஷேக் சர்மாவின் ஒட்டுமொத்த குடும்பமும் சுப்மன் கில்லை நேரடியாக சந்தித்து அளவளாவினர்.

அபிஷேக் சர்மாவின் அம்மா, தங்கை கோமல் சர்மா சுப்மன் கில்லை பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுடன் தங்களுக்கு எவ்வளவு அவரை பிடிக்கும் என்றும் தெரிவித்துவிட்டு, கில்லுடன் குடும்ப புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை இப்போது எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கும் அபிஷேக் சர்மாவின் தங்கை கோமல் ஷர்மா, என்னுடைய கிரஷ் சுப்மன் கில்லுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று மகிழ்ச்சியோடு பகிர்திருக்கிறார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் செம வைரலாக சென்று கொண்டிருக்கிறது. 

சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தைப் பிடித்து குவாலிஃபையர் ஒன்றில் விளையாட இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மே 21 ஆம் தேதி அகமதாபாத்தில் மோத இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஐபிஎல் 2024 இறுதிப் போட்டிக்கும், தோல்வியடையும் அணி குவாலிஃபையர் 2க்கும் செல்லும். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் இரண்டில் விளையாடும். 

மேலும் படிக்க | Rohit Sharma : ’தனியுரிமையை பாதிக்கிறது’ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது ரோகித் சர்மா அதிருப்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News