T20 கேப்டன் பதவில் இருந்து விலகும் விராட் கோலிக்கு Michael Vaughan சொல்வதென்ன?

2021 டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததற்கு, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் என்ன சொல்கிறார் தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 17, 2021, 11:26 AM IST
  • டி20 அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் விராட்
  • அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வார்
  • விராட் கோலிக்கு வாகனின் ஆறுதல்
T20 கேப்டன் பதவில் இருந்து விலகும் விராட் கோலிக்கு Michael Vaughan சொல்வதென்ன? title=

துபாய்: வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை 2021க்குப் பிறகு டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக இந்திய கேப்டன் விராட் கோலி அறிவித்ததற்கு பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. விராட் கோலி மேலும் வலுவாக திரும்புவார் என்று வான் கருதுகிறார்.

கோலியின் இன்ஸ்டாகிராம் பதிவில் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். "சரி முடிந்தது ... இது சுயநலமற்ற முடிவு மற்றும் அனைத்து அழுத்தங்களிலிருந்தும் சிறிது ஓய்வெடுப்பதுதேவை தான். இது, உங்களுக்கு இன்னும் நல்ல இடத்தை கொடுக்கும்."

விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் (Limited overs cricket) இந்தியா பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. விராட் தலைமையில் இந்திய அணி இதுவரை எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் விராட்டுக்கு பதிலாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டி 20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா சரியான தேர்வாக இருப்பார் என்று ஊகங்கள் உலா வந்தன. அதை உண்மையாக்கும் விதமாக, டி-20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். 

டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் தான், தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.  தாந்து விலகல் குறித்து விராட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணியின் கேப்டனாக நான் சிறப்பாகவே பணியாற்றுள்ளேன். ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனைவரின் ஆதரவு இல்லாமல், கேப்டனாக நான் சாதித்திருக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், உதவி பணியாளர்கள், தேர்வுக்குழுவினர், பயிற்சியாளர்கள் மற்றும் இந்தியா வெற்றி பெற பிரார்த்தனை நடத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி” என விராட் கோலி தெரிவித்துள்ளார். 

Also Read | கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறார் விராட் கோலி

கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக 3 ஃபார்மெட்ஸ்களிலும் விளையாடியுள்ள கோலி, 5 முதல் 6 வருடங்களாக கேப்டனாக பல்வேறு நெருக்கடிகளிலும் அணிக்காக விளையாடியுள்ளார். 

இனிமேல் விராட் கோஹ்லி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கும் மட்டும் கேப்டனாக தொடர்ந்து செயல்படவிருப்பதாக அறிவித்துள்ளார். எனவே எதிர்வரும் உலகக் கோப்பை டி-20 போட்டிகளுக்குப் பிறகு, அந்த அணியின் சாதாரண வீரராக கோலி விளையாடுவார்.
 
2021 யுஏஇ -யில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பையில் கோஹ்லி இந்திய அணியை வழிநடத்துவார். டி 20 போட்டிகளுக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கோஹ்லி 15 பேர் கொண்ட அணியை வழிநடத்துவார், இந்தப் போட்டித்தொடரில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவிருக்கிறது.  

33 வயதான விராட் கோஹ்லி, எதிர்காலத்தில் டி20 அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வேன் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோலி இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார், அதில் 65 வெற்றிகள், 27 தோல்விகள் என்ற நிலையில், அவரது தலைமையில் இந்திய அணி 70.43 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. கோஹ்லி கேப்டனாக இருந்த 45 டி20 போட்டிகளில், இந்திய அணி 27 முறை வென்றது, 14 முறை தோல்வியடைந்தது.

Read Also | அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் இந்திய அணி; சிக்கலில் விராட் கோலி, ரவி சாஸ்திரி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News