சிக்கலில் விராட் கோலி, ரவி சாஸ்திரி அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் இந்திய அணி

சமீபத்திய சம்பவங்களைப் பார்க்கும்போது, ​​ரவி சாஸ்திரிக்கு இனிமேல் பிசிசிஐ வாய்ப்பளிக்காது எனத் தெரிகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 15, 2021, 03:17 PM IST
  • ரவி சாஸ்திரிக்கு இனிமேல் பிசிசிஐ வாய்ப்பளிக்காது எனத் தெரிகிறது.
  • ஜூனியர் அளவில் சிறந்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.
  • விராட் தலைமையில் இந்திய அணி எந்தவித ஐசிசி கோப்பையை வெல்லவில்லை.
சிக்கலில் விராட் கோலி, ரவி சாஸ்திரி அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் இந்திய அணி title=

புதுடெல்லி: இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு விராட் கோலியை (Virat Kohli) அடுத்து, யாரை நியமிப்பது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆலோசனை நடத்தி வரும் நேரத்தில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்தும் விவாதிக்கப்படுவாதத் தெரிகிறது. ஏனென்றால் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலியின் அறிக்கையும் அதை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது. விரைவில் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சவுரவ் கங்குலியின் இந்த அறிக்கை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 2 மாதங்களுக்குப் பிறகு முடிவடைகிறது:
டி 20 உலகக் கோப்பைக்குப் (2021 ICC Men's T20 World Cup) பிறகு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவடைகிறது. இந்த ஒப்பந்தத்தை மேலும் தொடர ரவி சாஸ்திரியும் (Ravi Shastri) விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. சமீபத்திய சம்பவங்களைப் பார்க்கும்போது, ​​ரவி சாஸ்திரிக்கு இனிமேல் பிசிசிஐ வாய்ப்பளிக்காது எனத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக ஒரு புதிய பயிற்சியாளர் இந்திய அணிக்கு நியமிக்கப்படுவார். அதற்கான ஆலோசனைகள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. 

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக முடியும்:
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) ஒரு நேர்காணலின் போது,  நிரந்தரமாக (பயிற்சியாளர் பதவிக்கு) பணியாற்ற அவருக்கு (ராகுல் திராவிட்) ஆர்வமில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன் என்று கூறினார். இருந்தாலும் நாங்கள் அவரிடம் இதுப்பற்றி (இந்திய அணிக்கு பயிற்சியாளர்) பேசியதில்லை. அவரிடம் இதைப்பற்றி (பயிற்சியாளர் பதவி பற்றி) பேசும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம் எனக் கூறியிருந்தார்.

ALSO READ | கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுகிறாரா?

தேசிய கிரிக்கெட் அகாடமியின் (National Cricket Academy) தலைவராக உள்ள ராகுல் திராவிட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று ஊகிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக நான் இருக்க மாட்டேன் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமி தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.

ராகுல் டிராவிட் சிறந்த பயிற்சியாளர் என்பதை நிரூபித்தார்:
ராகுல் டிராவிட் (Rahul Dravid) பயிற்சியின் கீழ், 19 வயதுக்குட்பட்ட இந்திய மற்றும் இந்தியா ஏ அணிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 2018 இல் திராவிட் பயிற்சியின் கீழ், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த ஆண்டு ஜூலையில், டிராவிட் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் மற்றும் அந்த அணி ஒருநாள் தொடரை வென்றது. அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர் என்பதை நிரூபித்து வருகிறார்.

விராத்துக்கு மாற்றாக ரோஹித் கருதப்படுகிறார்:
கோஹ்லியின் தலைமையின் கீழ் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் (Limited overs cricket) இந்தியா அதிக வெற்றியைப் பெறவில்லை. அவர் தலைமையில் இதுவரை இந்திய அணி எந்தவித ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. அவருக்கு பதிலாக ஒருநாள் மற்றும் டி 20 அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்கலாம். ரோஹித் சர்மா (Rohit Sharma) தனது தலைமையின் கீழ் 5 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். இந்திய அணிக்கு அவர் கேப்டனாக இருந்தபோது டி 20 நிதாஹஸ் கோப்பை மற்றும் 2018 ஆசிய கோப்பையை வென்று தந்துள்ளார்.

ALSO READ | இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறார் தோனி?

தற்போதைக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் என பிசிசிஐ (BCCI) கூறியிருந்தாலும், எதிர்காலத்திற்கான ஏற்பாடுகள் உள்ளே நடந்து கொண்டிருக்கின்றன. டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணிக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் வேறு ஒருவர் நியமிக்கப்படலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News