Michael Vaughan: இந்தியா தற்காப்புடன் பேட்டிங் செய்வது உண்மையா?

இந்திய அணி தற்காப்புடன் பேட்டிங் செய்கிறது, கடைசி 10 ஓவர்களில் ரன்கள் எடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் மைக்கல் வாஹன். ஆனால், 2023 உலகக் கோப்பையில் இந்த அணுகுமுறையை இந்தியா இழக்க நேரிடும் என்றும் கணிக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 27, 2021, 08:56 PM IST
  • இந்தியா தற்காப்புடன் பேட்டிங் செய்வது இங்கிலாந்தின் உத்தி
  • இது 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு பாதகமாகும்
  • 2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது
Michael Vaughan: இந்தியா தற்காப்புடன் பேட்டிங் செய்வது உண்மையா? title=

புதுடெல்லி: இந்திய அணி தற்காப்புடன் பேட்டிங் செய்கிறது, கடைசி 10 ஓவர்களில் ரன்கள் எடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் மைக்கல் வாஹன். ஆனால், 2023 உலகக் கோப்பையில் இந்த அணுகுமுறையை இந்தியா இழக்க நேரிடும் என்றும் கணிக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர்.

புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது. இருந்த போதிலும், இங்கிலாந்து ஆறு ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி, வெற்றியை தட்டிப் பறித்தது.

இந்தியாவின் தற்காப்பு உத்தி தான், இந்த போட்டியில் தோற்றதற்கு காரணம் என்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

Also Read | IPL 2021: ஐபிஎல் முன்னேற்பாடுகளுக்காக மும்பைக்கு செல்லும் CSK

இந்தியா தொடர்ந்து தற்காப்பு முறையில் விளையாடுவதைத் தொடர்ந்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையில் இதன் எதிரொலியை தாங்க வேண்டியிருக்கும் என்று வாகன் நம்புகிறார்.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில், மெதுவான தொடக்கத்திற்குப் பிறகு கடைசி பத்து ஓவர்களில் இந்தியா 112 மற்றும் 126 ரன்கள் எடுத்தது. விராட் கோலி தலைமையிலான தற்போதைய அணி flat pitch ஆடுகளத்தில் 375 ரன்களுக்கு மேல் ரன்களை எடுக்க முடியும் என்று அவர் கருதுகிறார்.

அதுமட்டுமல்ல, போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டும், அது தான் ஒருநாள் போட்டிகளுக்கு நல்லது என்றும் வாகன் நம்புகிறார்.

Also Read | Cook with MLA: சிக்கன் 65 சமைத்து மக்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர்

 "முதல் 40 ஓவர்களை தற்காப்புடன் விளையாடுவதும் பின்னர் விறுவிறுப்பாக விளையாடுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் தோல்விக்கான காரணமாக அமையக்கூடும். 375 ரன்களுக்கு மேல் அடித்து ஆடும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. இது இங்கிலாந்தின் உத்தி" என்கிறார் வாகன்.

முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா ஒரு பெரிய வெற்றியுடன் தொடரைத் தொடங்கியது. இருப்பினும், இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து அணி மகத்தான வெற்றி பெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இப்போது இந்தத் தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் போட்டி ஞாயிற்றுக்கிழமை புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்று, இந்திய சுற்றுப்பயணத்தில் முதல் தொடர் வெற்றியை பதிவு செய்ய இங்கிலாந்து அணி விரும்புகிறது.

Also Read | லாட்டரிக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News