IPL 2021: ஐபிஎல் முன்னேற்பாடுகளுக்காக மும்பைக்கு செல்லும் CSK

இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்கு முந்தைய தயாரிப்புகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பைக்குச் சென்று, அங்கு ஒரு மாதம் முகாம் இட உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 25, 2021, 05:27 PM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பையில் ஒரு மாதம் முகாம்
  • தோனி உட்பட வீரர்கள் அனைவரும் மும்பைக்கு சென்றுவிட்டனர்
  • அணியின் சீருடை மாற்றப்பட்டுள்ளது
IPL 2021: ஐபிஎல் முன்னேற்பாடுகளுக்காக  மும்பைக்கு செல்லும் CSK title=

சென்னை: இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்கு முந்தைய தயாரிப்புகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பைக்குச் சென்று, அங்கு ஒரு மாதம் முகாம் இட உள்ளது. 

எம்.எஸ். தோனி தலைமையிலான அணி மும்பையில் ஐந்து போட்டிகளில் விளையாடும். டெல்லி கேபிடல்ஸ் (ஏப்ரல் 10), பஞ்சாப் கிங்ஸ் (ஏப்ரல் 16), ராஜஸ்தான் ராயல்ஸ் (ஏப்ரல் 19), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஏப்ரல் 21) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஏப்ரல் 25) என 5 போட்டிகளில் விளையாடும்.

ஐபிஎல் 14 இன் அனைத்து போட்டிகளும் பல்வேறு இடங்களில் நடைபெற்றாலும், பிளேஆப் மற்றும் இறுதி போட்டிகள் அகமதாபாத்தில் மே 25 முதல் 30 வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டு உள்ளது.

Also Read | சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு புதிய சீருடை- In Pics!

மஞ்சள் நிறத்திற்கு மாறிய அணி ஐ.பி.எல் போட்டிகளுக்கு முந்தைய தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டனர். மார்ச் 8 முதல் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கேப்டன் தோனியுடன் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

"பதினைந்து நாள் முகாம் மிகவும் பயனளிப்பதாக வீரர்கள் உணர்ந்தனர்” என்று சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தார்
 
“முந்தைய சீசனுக்குப் பிறகு, சென்னையை வருவதாக எங்களிடம் கூறிய தோனி, 2021 பதிப்பிற்கான தயாரிப்பை மார்ச் மாதத்திலேயே தொடங்கி விட்டார் என்று கூறிய அணியின் தலைமை நிர்வாக அதிகாரி, கேப்டனின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்ச்சியை பாராட்டினார்.

Also Read | ODI மற்றும் IPLஇன் சில போட்டிகளில் Shreyas Iyer இல்லை

சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் உறுதியான அணிகளில் ஒன்றாகும், அவர்கள் பங்கு கொண்ட 11 சீசன்களில் 10 இல் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதி போட்டிக்கு எட்டு முறை தகுதி பெற்றனர், மூன்று முறை கோப்பையை வென்றனர்.  

"எங்களுக்கு கிடைத்துள்ள வீரர்கள் மற்றும் இதுவரை நடைபெற்றுள்ள ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த பருவத்தில் அணி சிறப்பாக செயல்படும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம்” என்று விஸ்வநாதன் நம்புகிறார்.

பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான மொயீன் அலி மற்றும் கிருஷ்ணப்ப கவுதம் உட்பட சூப்பர் கிங்ஸ் அணி ஆறு வீரர்களைத் தேர்ந்தெடுத்தது.  

Also Read | லாட்டரிக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News