ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஷமியின் சொத்து மதிப்பு தெரியுமா?

Shami Net Worth: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமியின் நிகர சொத்து மதிப்பு குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 22, 2023, 09:03 PM IST
  • ஒருநாள் அரங்கில் ஷமி 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • 277 ரன்கள் இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
  • ஷமி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஷமியின் சொத்து மதிப்பு தெரியுமா? title=

Shami Net Worth: இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இன்றைய முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் ஐ.எஸ். பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

ஷமி மிரட்டல்

அதன்படி, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஷமி 5, அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 276 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்களையும், இங்லிஸ் 45 ரன்களையும் எடுத்தனர். 

அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டுகளான மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டாய்னிஸ் ஆகியோரையும், டெயிலெண்டர்களான ஷார்ட், அபார்ட் ஆகியோரையும் ஷமி பெவிலியனுக்கு அனுப்பினார். இதில் மூன்று விக்கெட்டுகள் போல்டாகும். இது ஒருநாள் அரங்கில் அவரின் இரண்டாவது ஐந்து விக்கெட் சாதனை ஆகும்.

மேலும் படிக்க |  அடுத்த 3 நாள்களுக்கு சென்னையில் களைகட்டப்போகும் கூடைப்பந்து தொடர்... இதுல என்ன புதுசு தெரியுமா?

சொத்து மதிப்பு

தொடக்க கட்ட ஓவர்களிலும், இறுதி ஓவர்களிலும் சிறப்பான பந்துவீசிய அவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வலுவான முத்திரையை  பதித்துவிட்டார் எனலாம். இந்நிலையில், பலரும் அவரின் சொந்த வாழ்வு குறித்தும் இணையத்தில் தேடி வருகின்றனர். குறிப்பாக, அவரின் சொத்து விவரங்களையும், அவரின் நிகர சொத்து மதிப்பையும் பலரும் தெரிந்துகொள்ள நினைக்கின்றனர். அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கு காணலாம். 

நடப்பு ஆண்டில் முகமது ஷமியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 47 கோடி ஆகும். அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரை ஏலத்தில் சுமார் ரூ.6.25 கோடிக்கு அந்த அணி வாங்கியது. அவரது ஐபிஎல் வருவாய் கணிசமானதாக உள்ளது, பல ஆண்டுகளாக அவரது ஒப்பந்தத் தொகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் காணப்படுகிறது.

ஷமியின் வருமானத்தின் முதன்மை ஆதாரமாக கிரிக்கெட் மட்டுமே உள்ளது. மேலும் அவர் உலகளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் சொகுசு வீட்டை வைத்திருக்கும் அவர், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களையும் தனது சேகரிப்பில் வைத்திருக்கிறார். ஷமியின் நிகர மதிப்பு சமீபத்திய ஆண்டுகளில் 40% வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது அவரது நிதி வெற்றி மற்றும் இந்திய கிரிக்கெட்டில் அவரின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது.

வலுவான நிலையில் இந்தியா

ஆஸ்திரேலியா உடனான முதல் ஒருநாள் போட்டியை பார்த்தோமானால், 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சுப்மான் கில் - ருதுராஜ் கெய்க்வாட் ஓப்பனர்களாக களமிறங்கி 142 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்தது. இருவரும் அரைசதம் கடந்த ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ், இஷான் ஆகியோரும் ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ் உடன் கேப்டன் கே.எல் ராகுல் பேட்டிங் செய்து வருகிறார். 37 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்தது. அதாவது 78 பந்துகளில் 72 ரன்கள் தேவை என்ற நிலையில் உள்ளது. 

மேலும் படிக்க |  தோனி தியாகமெல்லாம் செய்யவில்லை... கம்பீர் கருத்துக்கு ஸ்ரீசாந்த் நறுக் பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News