ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு நான் செய்யப்போவது இதுதான் - எம்எஸ்தோனிஓபன் டாக்

தோனி: 2024 ஐபிஎல்-லயும் விளையாடப் போறேன், ஓய்வு பிறகு ராணுவத்துல அதிக நேரம் செலவிடுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 24, 2023, 03:10 PM IST
  • ஓய்வு குறித்து பேசிய எம்எஸ் தோனி
  • ராணுவத்தில் அதிக நேரம் செலவிடுவேன்
  • இப்போது ஓய்வுபெறும் எண்ணம் இல்லை
ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு நான் செய்யப்போவது இதுதான் - எம்எஸ்தோனிஓபன் டாக் title=

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2024 ஐபிஎல் தொடரிலும் அணியில் இருப்பார் என்று அறிவித்துள்ளார். கடந்த 2023 ஐபிஎல் தொடரில் மூட்டு வலி காரணமாக தோனி பேட்டிங் செய்யாமல் தவிர்த்தார். இதனால் அதுதான் அவருக்கு கடைசி சீசன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் களமிறங்க உள்ளார். இதுகுறித்து கடந்த சீசன் இறுதிப் போட்டியில் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது உங்களுடைய கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, யார் அப்படி சொன்னார்கள் என்னால் முடியும் வரை விளையாடுவேன் என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

மேலும் படிக்க | தோனியின் தவறால் முடிவுக்கு வந்த சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் வாழ்க்கை..!

அதனையே மீண்டும்  ஒருமுறை இப்போது ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் எம்எஸ் தோனி. ஓய்வு குறித்து தோனி பேசுகையில், "நான் இன்னும் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அதனால் ஓய்வு குறித்து யோசிக்கவே இல்லை. ஒருவேளை நான் ஓய்வு பெற்று விட்டால் அடுத்தது நான் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து யோசிக்கவே வியப்பாக இருக்கும். ஆனால் நான் ஒன்று மட்டும் நிச்சயமாக செய்வேன். கடந்த சில காலமாக என்னால் ராணுவத்தில் சென்று பயிற்சி செய்ய முடியவில்லை. ராணுவ வீரர்களுடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை. இதனால் நான் ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் அதிக நேரம் செலவழிக்க போகிறேன். இதைச் செய்வேன்" என்று கூறியுள்ளார்.

தோனியின் இந்த பதில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எப்போதுமே தோனி ராணுவம் மீது அதிக அக்கறை கொண்டவராக திகழ்கிறார். கிரிக்கெட் விளையாடும் காலத்திலேயே ஓய்வு நேரத்தில் ராணுவ வீரர்களுடன் சென்று பயிற்சி செய்யும் தோனி இராணுவ வீரர்களுடன் பேசி அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பார். இப்போது கிரிக்கெட் களத்தில் இருந்து முழுமையாக விடைபெற்ற பிறகு ராணுவத்தினருடம் நேரம் செலவழிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் தோனி களமிறங்கினால், அது அவரது ஐபிஎல் வாழ்க்கையில் 17வது சீசன் ஆகும். ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார் தோனி. இது ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்தவொரு வீரரும் படைக்காத மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கிறது. அவரை வெற்றிகரமாக வழியனுப்ப வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும், அந்த அணி நிர்வாகமும் இருக்கிறது. 

மேலும் படிக்க | இந்திய அணியும் சனி பெயர்ச்சியும்... இத்தனை வீரர்களுக்கு காயமா... மீள்வது எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News