‘அசால்ட்டா நெனக்காதீங்க’ எப்போது வேண்டுமானாலும் விராட் கோலி ‘ஃபார்முக்கு’ வருவார் - பாக். வீரர் யாசீர் ஷா எச்சரிக்கை

Virat Kohli Back To Form : ரொம்ப நாளாக கிரிக்கெட் ரசிகர்கள் கேட்கும் ஒரு கேள்வி என்னவென்றால், எப்போது விராட் கோலி ஃபார்முக்கு வருவார் என்பதுதான்!. ஆசியக் கோப்பை வேறு வருகிறது. இதில் விராட் கோலி மீண்டு வருவாரா ?  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Aug 21, 2022, 07:20 PM IST
  • ஆசியக் கோப்பையில் மீண்டு வருவாரா விராட் கோலி
  • ‘எப்போது வேண்டுமானாலும் விராட் கோலி ஃபார்முக்கு வருவார்’
  • அசால்ட்டா நினைக்க வேண்டாம் என பாக். வீரர்களுக்கு யாசீர் ஷா எச்சரிக்கை
‘அசால்ட்டா நெனக்காதீங்க’ எப்போது வேண்டுமானாலும் விராட் கோலி ‘ஃபார்முக்கு’ வருவார் - பாக். வீரர் யாசீர் ஷா எச்சரிக்கை  title=

செஞ்சுரி அடித்துவிட்டு ஆக்ரோஷமாக விராட் கோலி செய்யும் செய்கைகளை கண்டு பல மாதங்களாகிவிட்டன. விராட் கோலியின் அற்புதமான ‘கவர் ட்ரைவ்களை’ கண்டு அசராத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியுமா என்ன.? 

இந்திய அணியில் இளம் ஆட்டக்காரர்கள் எல்லாம் நன்றாக விளையாடி வரும் நிலையில், கிங் கோலி இன்னும் ஃபார்முக்கு வராதது ரசிகர்களுக்கு பெரும் கவலையை அளித்து வருகிறது. இதனால் பிற நாடுகளில் உள்ள வீரர்கள் கூட விராட் கோலியின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | எனக்கு டிப்ரஷனா? என்ன இப்படி சொல்லிட்டீங்க? விளக்கம் கொடுக்கும் விராட் கோலி

தற்போது ஆசிய கோப்பை வேறு நெருங்கிவிட்டது. இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை 2022 தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்தத் தொடரை நடைபெறுகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை என ஆறு அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடர் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் நடைபெற உள்ளது.

இதில் குரூப் ஏ சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி விளையாடுகின்றன. அது முடிந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றில் விளையாட வேண்டும். குரூப் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடலாம். 

வெறும் 15 நாட்கள் இடைவெளியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாட வாய்ப்பு அமைந்துள்ள காரணத்தால் இதனை இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் விராட் கோலி அசத்துவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசீர் ஷா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விராட் கோலி குறித்துப் பேசியுள்ளார். 

அதாவது, ‘விராட் கோலியை சாதாரணமாக எடை போட்டுவிட வேண்டாம். இப்போது ரன் அடிக்க திணறலாம். ஃபார்மில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். எப்போது வேண்டுமானாலும் விராட் கோலி திடீரென ஃபார்முக்கு வருவார். எனவே, ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் விராட் கோலியை எளிதாக நினைக்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.

வேட்டையாட முடியாவிட்டாலும் சிங்கம் எப்போதும் காட்டின் ராஜாதானே.! கம் பேக் மிஸ்டர். கிங் விராட் கோலி..!!!!

மேலும் படிக்க | Virat Kohli: ஃபார்முக்கு திரும்ப விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News