Virat Kohli: ஃபார்முக்கு திரும்ப விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு

அவுட்டாப் ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, மீண்டும் ஃபார்முக்கு திரும்ப அதிரடி முடிவு எடுத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 28, 2022, 06:54 PM IST
  • மீண்டும் ஃபார்முக்கு திரும்புவாரா கோலி?
  • வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு
  • பார்முக்கு திரும்ப கோலி எடுத்திருக்கும் அதிரடி முடிவு
Virat Kohli: ஃபார்முக்கு திரும்ப விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு title=

Virat Kohli: இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு இது மிக மோசமான காலம். ஃபார்ம் அவுட்டில் இருக்கும் அவர், மீண்டும் பழைய கோலியாக திரும்புவதற்கு கடும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இங்கிலாந்து உள்ளிட்ட எந்த தொடரும் அவருக்கு சரியாக அமையவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காத கோலி, இன்னும்  இந்திய அணியில் எதற்கு? என்ற கேள்வி எல்லாம் எழுந்துவிட்டது. முன்னாள் வீரர்கள் சிலர்கூட, இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும்போது, விராட் கோலிக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பது என்பது சரியான முடிவு கிடையாது என வெளிப்படையாக விமர்சித்துள்ளனர். மேலும், பிசிசிஐ மற்றும் தேர்வர்கள் இது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | ஸ்காட்லாந்தை துவம்சம் செய்த விராட் கோலி நண்பர்! 56 பந்துகளில் சதம்

அதேநேரத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார். அவருக்கு தேவையான ஆதரவு அணி நிர்வாகத்திடம் இருக்கிறது என திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசும்போது, விராட் கோலி தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால், அவருக்கு நீண்ட ஓய்வு தேவை எனக் கூறியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு நிச்சயம் சிறப்பான பேட்டிங்கை கோலியிடம் எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த கருத்துக்கு ஏற்ப, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரக்யான் ஓஜா தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், இனிவரும் அனைத்து  தொடர்களிலும் விராட் கோலி விளையாட முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை அடுத்தடுத்து வர இருப்பதால், முழுமையாக அதற்கு தயார்படுத்திக் கொள்ள கோலி முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கோலி விளையாட இருப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க | சிறை செல்லும் நெய்மர் - நெருங்கும் சட்டச்சிக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News