'நான் போஸ்ட் போடவே இல்லை'... காதலர் தினத்தில் கடுப்பான இந்திய வீரர்!

Prithvi Shaw Valentines Day Viral Photo: காதலிக்கு காதலர் தின வாழ்த்துகள் கூறும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் புகைப்படம் ஒன்று வைரலான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 14, 2023, 05:46 PM IST
  • பிருத்வி ஷா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
  • இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
  • கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 ஸ்குவாடில் அவர் இடம்பெற்றிருந்தார்.
'நான் போஸ்ட் போடவே இல்லை'... காதலர் தினத்தில் கடுப்பான இந்திய வீரர்! title=

Prithvi Shaw Valentines Day Viral Photo: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிருத்வி ஷா, சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் காலடி எடுத்துவைக்க தீவிரமாக முயன்று வருகிறார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தாலும், இந்திய அணியில் அவருக்கான இடம் கிடைக்காமல் இருந்து வரும் நிலை, தொடர்ந்து வருகிறது. அவருக்கு பல மூத்த வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

கிரிக்கெட் வாழ்க்கை மட்டும் இல்லை, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்னைகள் நிலவியதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, அவரின் காதலியும், பிரபல நடிகையுமான நித்தி தபாடியாவிற்கும், பிருத்வி ஷாவுக்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும், காதலர் தினமான இன்று பிருத்வி ஷாவும், நித்தி தபாடியாவும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் படிக்க | IND vs AUS: 2வது டெஸ்டில் முக்கிய வீரர் இல்லை! பின்னடைவில் இந்திய அணி!

தொடர்ந்து, நித்தி தபாடியாவும் இன்ஸ்டாவில்,"முதலில் உங்களை காதலியுங்கள்" என ஸ்டோரியில் பதிவிட்டு, அவரது காதலர் தின வாழ்த்தை குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ரசிகர்கள் பிருத்வி ஷாவின் புகைப்படத்தை வைரலாகினர். மேலும், பிருத்வி ஷா - நித்தி தாபாடியா ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடிப்பதாகவும் பதிவிட்டு வந்தனர். 

இந்நிலையில், பிருத்வி ஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,"ஒருசிலர் எனது புகைப்படத்தை வைத்து சில காரியங்கள செய்கின்றனர். நான் அதனை ஸ்டோரியிலோ அல்லது எனது பக்கத்திலோ பதிவிடவில்லை. எனவே ரசிகர்கள் அதில் இருந்த கருத்தை புறக்கணிக்கவும்" என பதிவிட்டுள்ளார். அதாவது, காதலர் தினத்தை முன்னிட்டு, அவர் ஏதும் பதிவிடவில்லை என்றும், வைரலான புகைப்படம் போலியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போது பிருத்வி ஷாவின் ஸ்டோரியையும ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

Prithvi Shaw

பிருத்வி ஷா கடந்த இரண்டு வருடங்களாக உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் அஸ்ஸாமுக்கு எதிராக 181.42 ஸ்ட்ரைக் ரேட்டில் 332 ரன்களை எடுத்தார், கடந்தாண்டு போட்டியில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

விஜய் ஹசாரே டிராபியில், அவர் ஏழு இன்னிங்ஸ்களில் 217 ரன்கள் எடுத்தார். 2021-22 ரஞ்சி டிராபி தொடரில் ஷா ஆறு போட்டிகளில் விளையாடி 355 ரன்கள் குவித்தார்.

மேலும் படிக்க |  WPL Auction: அதிக தொகைக்கு ஏலம்... சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த ஸ்மிருதி மந்தனா - ஆர்சிபி கேப்டன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News