’நாங்க நினைச்சதே வேற’ 2வது டெஸ்ட் வெற்றி குறித்து ஓபனாக பேசிய புஜாரா..!

2வது டெஸ்ட் போட்டியில் நினைத்ததைவிட மிக குறைவான ஸ்கோரில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து விட்டதாக புஜாரா தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 19, 2023, 03:42 PM IST
’நாங்க நினைச்சதே வேற’ 2வது டெஸ்ட் வெற்றி குறித்து ஓபனாக பேசிய புஜாரா..! title=

டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய புஜாரா இந்திய அணிக்காக வெற்றிக்கான ரன்களை அடித்தார். முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த அவர், 2வது இன்னிங்ஸில் முதல் ரன் எடுத்தவுடன் நிம்மதி பெருமூச்சுவிட்டார். பின்னர் நிலைத்து நின்ற அவர், இந்திய அணி வெற்றி பெறும் வரை களத்தில் இருந்தார். 

இந்தியா வெற்றி

2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றி மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை மீண்டும் தக்கவைத்துள்ளது. மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற 100வது சர்வதேச வெற்றியாகவும் இது பதிவானது.

அதாவது ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் 20 ஓவர் என மூன்று வடிவங்களிலும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற 100வது வெற்றியாக பதிவானது. இப்போதைய பார்டர் கவாஸ்கர் டிராபியில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

மேலும் படிக்க | IPL 2023: கண்ணீர் கடலில் ரசிகர்கள்... தோனி - விராட் மோதிக்கொள்ளும் அந்த கடைசி போட்டி

புஜாரா நெகிழ்ச்சி

இந்திய அணிக்கு மகத்தான வெற்றி போல் புஜாராவுக்கும் இந்த வெற்றி எப்போதும் நினைவு கூறக்கூடிய வெற்றியாக அமைந்துள்ளது. இது அவருக்கு 100வது டெஸ்ட் போட்டி. அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கான வெற்றி ரன்களை புஜாரா அடித்து ஒட்டுமொத்த அணியையும் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவருக்கு 100வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதுபோல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற 100வது வெற்றியாகவும் அமைந்தது. வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் தாங்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை புஜாராவுக்கு நினைவு பரிசாக வழங்கினர். 

புஜாரா பேட்டி

இந்திய அணிக்காக வெற்றி ரன்களை அடித்த பிறகு பேசிய புஜாரா, ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த இலக்கை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார். அந்த அணி விளையாடிய விதத்தை பார்க்கும்போது நிச்சயம் 250 ரன்களாவது அடிக்கும் என நினைத்திருந்ததாகவும், ஆனால் ஜடேஜா பந்துவீச வந்தபிறகு ஒட்டுமொத்த ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சையும் புஜாரா பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே விளையாடும் போட்டிகள்... முழு விவரம் - மார்க் பண்ணி வச்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News