ஜடேஜாவை புகழ்ந்து தோனியை புறக்கணித்த ரெய்னா - காரணம் என்ன?

சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த ரெய்னா, தோனியைப் பற்றி ஒருவார்த்தை பேசவில்லை. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2022, 07:45 AM IST
  • தொடரும் தோனி - ரெய்னா மோதல்
  • தோனியை பாராட்ட ரெய்னா
  • ஜடேஜாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்
ஜடேஜாவை புகழ்ந்து தோனியை புறக்கணித்த ரெய்னா - காரணம் என்ன? title=

ஐபிஎல் 2022 நாளை பிரம்மாண்டமாக மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கேப்டனாக இருந்த தோனி, முதன்முறையாக சென்னை அணியின் வீரராகவும், ஜடேஜா கேப்டனாகவும் செயல்பட உள்ளார். 

மேலும் படிக்க | ஐபிஎல்-ல் கடைசி ஓவரில் அதிக சிக்ஸ்சர்கள் அடித்தது இவரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு சர்பிரைஸாக இருந்தாலும், ஏற்கனவே ஜடேஜா சென்னை அணியன் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என பூடகமாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த ஆண்டா? அல்லது அடுத்த ஆண்டா? என்பது மட்டும் சஸ்பென்ஸாக இருந்தது. இதற்கு காரணம், தோனி 40 வயதை கடந்துவிட்டதால் அவர் இந்த ஐபிஎல் போட்டியுடன் ஓய்வுபெற்றுவிடுவார் என்பது அனைவருக்கும் எதிர்பார்த்த ஒன்று. ஆனால், இந்த ஆண்டே கேப்டன் பதவியில் இருந்து விடைபெறுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டதற்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  அதில், சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டது சரியான தேர்வு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஜடேஜாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த ரெய்னா, தன்னுடைய நண்பரும், முன்னாள் கேப்டனுமான தோனியைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இதனை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் தோனியைப் பற்றி பேசாதது ஏன்? என்று ரெய்னாவுக்கு கேள்வி எழுப்பினர். 

கடந்த ஐபிஎல் போட்டியின்போதே தோனிக்கும் ரெய்னாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால், ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய ரெய்னா, அதுகுறித்து மவுனம் சாதித்து வருகிறார். சிஎஸ்கே கேப்டன் மாற்றத்தில் தோனியைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசாததன் மூலம் இருவருக்கும் இடையே புகைச்சல் இருப்பது உறுதியாகிருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். 

மேலும் படிக்க | எம்எஸ் தோனியின் கேப்டன்சி சாதனைகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News