தோனி என்னை அணியில் இருந்து தூக்கும் முன் என்ன சொன்னார் தெரியுமா? - ரகசியம் பகிரும் ரெய்னா!

MS Dhoni Suresh Raina: 2021 ஐபிஎல் சீசனின் பிளேயிங் லெவனில் உத்தப்பாவுக்கு வாய்ப்பளிக்க தோனியிடம் நான் தான் பரிந்துரை செய்தேன் என சுரேஷ் ரெய்னா ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2023, 06:23 PM IST
  • 2021இல் ராபின் உத்தப்பா சிஎஸ்கேவுக்கு துருப்புச்சீட்டாக அமைந்தார்.
  • 2021இல் சிஎஸ்கே கோப்பையை கைப்பற்றியது.
  • உத்தப்பா 4 போட்டிகளில் 115 ரன்களை குவித்து அசத்தினார்.
தோனி என்னை அணியில் இருந்து தூக்கும் முன் என்ன சொன்னார் தெரியுமா? - ரகசியம் பகிரும் ரெய்னா! title=

MS Dhoni Suresh Raina: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2021 சீசனின் இறுதிக்கட்டத்தில், ராபின் உத்தப்பாவுக்கு இடம் கொடுக்க தங்களின் பெரிய நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவை அணியில் இருந்து தூக்கி, மிகப்பெரும் கடினமான முடிவை எடுத்தது. 

ரெய்னாவின் காயம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய அணியில் உத்தப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் 2021க்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து அவர் சென்னை அணியால் வாங்கப்பட்டார். அப்போது, ரெய்னா காயம் அடைந்ததாக டாஸில் தோனி தெரிவித்திருந்தார். இருப்பினும், சீசனின் எஞ்சிய காலத்திற்கு சென்னை அணியின் பிளேயிங் லெவனில் ரெய்னாவுக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. 

உத்தப்பா வந்தது ஒரு தந்திரம்

அணியின் வலது கை பேட்டருக்கு வாய்ப்பளிப்பது ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்றும், அதற்கு சிஎஸ்கே கேப்டன் தோனி அவரிடம் ஆலோசனை செய்ததாகவும் ராபின் உத்தப்பா உடனான உரையாடலின் போது சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார்.

ரெய்னாவின் பரிந்துரை

இது குறித்து அவர் கூறுகையில்,"தோனியும் நானும் பேசும்போது, ‘நீ ராபின் உத்தப்பாவை முயற்சித்து பார்க்க வேண்டும்' என்று நான் அவரிடம் பரிந்துரை செய்தேன். அவர் (தோனி) உங்களிடம் (ராபின் உத்தப்பா) விளையாட என்னிடம் அனுமதி பெற்றார், நான் அவரிடம் 'நாம் இறுதிப் போட்டிக்கு முன்னேற அவர் உதவியாக இருப்பார், என்னை நம்புங்கள்' என்று கூறினேன்" என்றார். ஜியோ சினிமாவின் ஒரே நிகழ்ச்சியில் உத்தப்பாவிடம் ரெய்னா இதை கூறினார்.

மேலும் படிக்க | 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா அம்பதி ராயுடு? பரபரக்கும் அரசியல் களம்

அவர் பிளேயிங் லெவனில் இருந்து தன்னை நீக்குவது என்பது தோனியின் அகராதியில் இல்லை என்று ரெய்னா மேலும் கூறினார். ஆனால் உத்தப்பா அணியில் இருப்பதற்கு தகுதியானவர் என்று ரெய்னா கூறியதால் தோனி அதை ஒப்புக்கொண்டார் என தெரிகிறது. 

சாம்பியனான சென்னை

"எம்.எஸ். தோனி, 'நாம் 2008 முதல் விளையாடி வருகிறோம், ஆனால் இந்த சீசனில் நான் வெற்றி பெற விரும்புகிறேன். இப்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்' என்று கூறினார். நான் 'ராபினை நம்பர் 3இல் விளையாட வையுங்கள். அவர் இறுதி வரை பிளேயிங் லெவனில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெற்றால், சிஎஸ்கே வெற்றி பெறும். நான் விளையாடினாலும் சரி, ராபினும் ரெய்னாவும் ஒரே மாதிரியானவர்கள்" என்று ரெய்னா மேலும் கூறினார்.

ஐபிஎல் 2021இல் உத்தப்பா 136.90 ஸ்ட்ரைக் ரேட்டுடன் நான்கு போட்டிகளில் 115 ரன்கள் எடுத்தார், இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அகமதாபாத் பிட்சில் பேயா இருக்கிறது? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஷாகித் அப்ரிடி சரமாரி கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News